சென்னை: தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முதலில் ஒரு சாதனை படைத்துள்ளார் மில்லத் அகமது. இவர் செய்த சாதனை என்ன தெரியுமா? தனது முதல் படத்திலேயே 10 துறைகளை கையாண்டு சாதனை படைத்துள்ளார்.
காரைக்காலைச் சேர்ந்த சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் மில்லத் அகமது. இவர் என்ற "ஆந்தை" என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் இவர், "நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், பாடல், பாடலுக்கு குரல், பின்னணி குரல், நடனம், தயாரிப்பு மற்றும் இணை இயக்கம்" என தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் படத்தில் பத்து துறைகளை கையாண்டவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தச் சாதனையைப் பாராட்டி லண்டன் உலக சாதனைப் புத்தகம் மற்றும் இந்தியா உலக சாதனைப் புத்தகம் அங்கீகரித்து பதிவு செய்து உலக சாதனையாளர் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். புதுச்சேரி மாநிலத்திலிருந்து திரைப்படத் துறையில் சாதித்தவர் என்ற பெயரும் பெற்றுள்ளார் மில்லத் அகமது. புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அப்போது ஆந்தை திரைப்படம் வெற்றி பெற்று, மேலும் பல நல்ல திரைப்படங்களைத் தரவேண்டும்" என்று வாழ்த்து கூறி ஆசிர்வதித்தார். மில்லத் அகமது 2021ஆம் ஆண்டு ஐந்து வார்த்தையில் சிறுகதை எழுதி உலக சாதனைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மில்லத் அகமது பேசுகையில், முதலில் ஆந்தை திரைப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இணை இயக்கம் என ஐந்து துறைகளை மட்டுமே கவனித்தேன். "ஊத்து ராவா" பாடல் பதிவின்போது இசையமைப்பாளர் ராம் அவர்கள் பாடலில் வரும் வசனங்களை என்னைப் பேச சொன்னார். பேசினேன் நன்றாக இருந்ததால் அப்படியே வைத்துக் கொண்டோம். பிறகு பாண்டிச்சேரியில் சில காட்சிகளும், ஒரு பாடல் காட்சியும் படம்பிடிக்க வேண்டியிருந்தது. அதற்கு இயக்குநரால் வர இயலாத சூழ்நிலையால் நான் சென்று இயக்கினேன். அப்போது சைக்கோ பாடலுக்கு நானே நடனம் அமைத்தேன்.
நன்றாக வந்திருக்கிறது படம் பார்த்தால் உங்களுக்குத் தெரியும்.
பிறகு டப்பிங் பேசும் போது ஒரு போலிஸ் கேரக்டர், ஒரு பைக்காரர், டெலிபோன் குரல், பெண் பற்றிய வசனம் மற்றும் சுகாதார அறிவுரையும் பேசியுள்ளேன். இந்த படத்தில் நடித்தும் இருக்கிறேன். ஆக ஒன்பது துறைகள் வந்துவிட்டது. இறுதியாக இந்தத் திரைப்படத்தில் ஆரம்பத்தில் இருந்த தயாரிப்பாளர்களால் தொடர்ந்து பயணிக்க இயலாத காரணத்தால் நானே தயாரிப்பாளர் ஆகிவிட்டேன்.
படத்தை முடித்தப்பிறகு பார்த்தால் 10 துறைகளையும் கவனித்து விட்டேன். பொதுவாக முதல் படத்தில் நான்கு அல்லது ஐந்து துறைகள் மட்டுமே கவனிப்பார்கள். இதனை லண்டன் உலக சாதனைப் புத்தகம் மற்றும் இந்தியா உலக சாதனைப் புத்தகம் ஆகியவற்றிற்கு தெரிவித்தோம். அவர்கள் ஆய்வுசெய்து இறுதியில் இந்தச் சாதனையை அங்கீகாரம் செய்தார்கள் என்று கூறினார்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}