மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம். அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கோ, திமுகவுக்கோ இல்லை என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விகடன் பதிப்பகம் சார்பில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியீட்டார். இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா தமிழகத்தில் உள்ள மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று திமுகவை நேரடியாக தாக்கி பேசியிருந்தார். இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து 6 மாத கால அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார் ஆதவ் அர்ஜூனா.இது குறித்த அறிவிப்பை கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். இதனையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து தான் நிரந்தரமாக விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்தார். இதுகுறித்து ஆதவ் அர்ஜூனா கூறுகையில், தான் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான பின்னணியில் திமுக உள்ளது. திமுகவும், அமைச்சர் எ.வ.வேலுவும் திருமாவளவனுக்கு கடும் அழுத்தம் கொடுத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டிற்கு திருமாவளவன் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆதவ் அர்ஜூனாவின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் செய்தியாளர்களிடம் இன்று விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என ஆதவ் அர்ஜூனா கூறுவது போல எந்தவொரு அழுத்தத்தையும் திருமாவளவனுக்கு நான் கொடுக்கவில்லை.
நட்புக்குரியவர் திருமாவளவன். அவர் என்னுடன் பேசுகிறார் என்பதற்காக நான் அழுத்தம் கொடுக்கிறேன் என்பது பொருள் அல்ல. அப்படி எந்தவொரு அழுத்தத்தையும் நான் கொடுக்கவில்லை. அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. திருமாவளவன் ஒரு அறிவாளி. அரசியலில் தொலைநோக்குப் பார்வை கொண்டவர். அரசியலைப் பற்றி நன்கு புரிந்து கொண்டவர். அவருக்கு இன்னொருவர் வந்து அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் எதுவம் கிடையாது. அவர் சுயமாக முடிவெடுப்பதற்கு அந்த கட்சியில் அவருக்கு உரிமை உண்டு. அவர் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்.
நான் அவருடன் 2021ம் ஆண்டு முதல் பழகிக் கொண்டிருக்கிறேன். அதற்காக என்ன ஆதவ் அர்ஜூனாவிடம் சென்று அனுமதியா கேட்க முடியும். அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கோ, திமுகவுக்கோ அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மணக்கும் மலர்கள்.. மயக்கும் மழலைகள்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 14, 2025... இன்று நல்ல காலம் பிறக்கிறது
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!
மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சி தந்த அதிர்ச்சி!
பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!
இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!
பெற்று வளர்த்த தாய்மடி
{{comments.comment}}