அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது?.. அன்பில் மகேஷ் தாக்கு!

Sep 30, 2025,12:32 PM IST

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கைக்கு மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நம் தமிழ் உறவுகள்’ என கரூர் துயரத்திற்கு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட வீடியோவை பார்த்துவிட்டுக் கதறியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.


நாம் முதலமைச்சராக இருந்த போது தொலைக்காட்சியைப் பார்த்துத்தானே ஆட்சி செய்தோம். இப்போது இருக்கிற முதலமைச்சர் நேரில் போகிறாரே? என்ற விரக்தியில், இயலாமையில் உளற ஆரம்பித்திருக்கிறார்.




கரூர் சம்பவத்திற்கு ஆணையத்தை அரசு அமைத்ததை Eyewash ஆணையம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்போது அமைக்கப்பட்டிருக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தைதான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த போது அமைத்தவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பழனிசாமியின் Eye மூடியிருந்ததா? ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தவரும் எடப்பாடி பழனிசாமிதான். ஜெயலலிதாவின் மரணத்தை விசாரித்தது கூட Eyewash-தானா?


சமூக ஊடகங்களில் எந்தமாதிரியான சதிக் கோட்பாட்டுக் கதைகள் பரவி வருகின்றன என்பது தெரியாதா? உங்கள் கட்சியின் ஐடி விங்கிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.


ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும் இறந்த போதும் என்னவெல்லாம் நாடகம் ஆடினீர்கள்? பிறகு ஆர்.கே. நகர் தேர்தலில் இறந்த உங்களுடைய தலைவர் உடல் போன்ற சித்தரிக்கப்பட்ட பொம்மையை வைத்து பரப்புரை செய்தீர்கள். பொம்மையை வைத்து அரசியல் செய்த வரலாற்றை எழுதியவர்கள்தானே நீங்கள். இதுபோன்ற நாடகங்களை நடத்திப் பழக்கப்பட்ட உங்களுக்கு எல்லாமே போட்டோஷூட்டாகத் தெரியும். பிணங்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு உண்மையான அக்கறை வெளிப்படாது.


அமைச்சர் ஒருவர் அழுவது போல நடிக்கத் தெரியாமல் மாட்டிக்கொண்டார் எனச் சொல்லியிருக்கிறார். இதே செப்டம்பர் 29-ம் தேதி 11 ஆண்டுகளுக்கு முன்பு அழுகாச்சியோடு ஓர் அமைச்சரவை பதவியேற்பு நாடகம் நடந்தது பழனிசாமிக்கு தெரியுமா? சொத்துக் குவிப்பு வழக்கில் 2014-ல் நீதிபதி குன்ஹா தீர்ப்பால் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். அதனால், பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கண்ணீரோடு பதவியேற்றது. அப்போது அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது? என்று கேட்டுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சொந்த தந்தையைக் கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை.. அன்புமணிக்கு அன்பில் மகேஷ் பதிலடி

news

அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது?.. அன்பில் மகேஷ் தாக்கு!

news

விஜய் எப்போது மீண்டு வருவார்.. Weekend பிரச்சார வடிவம் மாறுமா?.. இதே கூட்டம் இனி வருமா??

news

சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி 2025 : வழிபடுவதற்கான நல்ல நேரம், வழிபடும் முறை

news

இன்று நவராத்திரி 9ம் நாள்...அம்பிகையை வழிபடும் முறை, மலர், பிரசாதம் விபரம்

news

ஆயுத பூஜை .. சரஸ்வதி பூஜை .. கல்விக்கும், தொழிலுக்கும் நன்றி செலுத்தும் தினம்!

news

வழிபாடு என்பது என்ன? .. What is Prayer!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 30, 2025... இன்று நினைத்தது நிறைவேறும் நாள்

news

கரூர் துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்