சொந்த தந்தையைக் கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை.. அன்புமணிக்கு அன்பில் மகேஷ் பதிலடி

Sep 30, 2025,12:32 PM IST

சென்னை: வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப் படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணியின் கேலிக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.


கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி அமைச்சர் அன்பில் மகேஷ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கரூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து நலம் விசாரித்தனர். அதன் பிறகு வெளியே வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் துக்கம் தாங்க முடியாமல் அழுதார். திரும்பத் திரும்பச் சொன்னோமே கேட்டீங்களா என்றும் அவர் புலம்பினார். இந்த வீடியோ வைரலாகப் பரவியது.


இதுகுறித்து கருத்து தெரிவித்த டாக்டர் அன்புமணி, ஆஸ்கர் விருது வழங்கும் அளவுக்கு அழுதிருக்கிறார் அமைச்சர் என்று கிண்டலாக கூறியிருந்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கூட இதே கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அன்புமணிக்கு பதிலடி கொடுத்துள்ளார் அன்பில் மகேஷ்.




இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார்.


கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்! 


எங்கள் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார். தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம்.


வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன் என்று கூறியுள்ளார் அன்பில் மகேஷ்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சொந்த தந்தையைக் கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை.. அன்புமணிக்கு அன்பில் மகேஷ் பதிலடி

news

அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது?.. அன்பில் மகேஷ் தாக்கு!

news

விஜய் எப்போது மீண்டு வருவார்.. Weekend பிரச்சார வடிவம் மாறுமா?.. இதே கூட்டம் இனி வருமா??

news

சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி 2025 : வழிபடுவதற்கான நல்ல நேரம், வழிபடும் முறை

news

இன்று நவராத்திரி 9ம் நாள்...அம்பிகையை வழிபடும் முறை, மலர், பிரசாதம் விபரம்

news

ஆயுத பூஜை .. சரஸ்வதி பூஜை .. கல்விக்கும், தொழிலுக்கும் நன்றி செலுத்தும் தினம்!

news

வழிபாடு என்பது என்ன? .. What is Prayer!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 30, 2025... இன்று நினைத்தது நிறைவேறும் நாள்

news

கரூர் துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்