பெரியார் சொல்லாதவற்றை சொன்னார் என பொய் பரப்பும் தற்குறிகள்.. துரைமுருகன் ஆவேசம்!

Jan 10, 2025,08:20 PM IST

சென்னை: தந்தை பெரியார் குறித்து அவதூறு  கருத்துக்களை பரப்பிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து, பெரியார் என்ன சொன்னார் எப்போது சொன்னார் என்பது பற்றி தெரியாமலும் பெரியார் சொல்லாதவற்றையும் கூட அவர் சொன்னதாக அபாண்டமாக அவதூறு பரப்பியும் யாருக்கோ ஏஜெண்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள், தங்கள் சொந்த அரிப்பை தீர்த்துக் கொள்வதற்காக பெரியார் என்று ஆலமரத்தின் மீது உரசி பார்க்கின்றன என திமுக பொதுச்செயலாளரும்,  அமைச்சருமான துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பெரியார் குறித்த கருத்துக்களை கூறியிருந்தார். இவர் பேசிய கருத்துக்கள்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக முழுவதும் கடும்  எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. குறிப்பாக சீமானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் நேற்று சீமானின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதேசமயம் இவர் மீது பல்வேறு மாவட்ட காவல் நிலைகளிலும் புகார்கள் குவிந்து வருகின்றன. 


இந்த நிலையில் சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:




மனிதர்களிடையே சாதி, மதம், மொழி, நிறம், பாலினம் என எந்தவகை ஏற்றத்தாழ்வும்  இல்லாத சமத்துவச் சமுதாயம் அமைந்திட வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் தந்தை பெரியார். அவருடைய கொள்கை உறுதியின் விளைவாக, தேர்தல் களத்தையே காணாமல் தன் இலட்சியங்களை அரசாங்கத்தின் சட்டங்களாகத் திட்டங்களாக மாறச் செய்து, தான் வாழும் காலத்திலேயே அவை நிறைவேறிடக் கண்டவர். 


திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து வந்தது தான். பெரியாரின் லட்சியத்தை அரசியல் வழியில் முன்னெடுத்தார் அண்ணா. அப்போது இரு இயக்கங்களுக்குமிடையிலான கருத்து மோதல்கள் இருந்தன. அவற்றையெல்லாம் கடந்துதான், 1967-இல் பெரியாரின் வாழ்த்துகளுடன் ஆட்சிப் பொறுப்பேற்று, இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை என்றார் அண்ணா.


பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சமபங்கு கொடுத்தவர் கலைஞர். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றி, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட முனைந்தவரும் அவர்தான். அந்தச் சட்டத்தின்படி அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி ஆணை வழங்கி, முள்ளை அகற்றியவர் மாண்புமிகு முதலமைச்சர், பெரியாரின் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகவும், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகவும் கடைப்பிடிக்கிறது திராவிட மாடல் அரசு.


மானமும், அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள் அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியாரின் புகழை மறைக்க முடியாது. தெளிந்த உள்ளம் கொண்ட தலைவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் பெரியாரின் கருத்துகளை மதிப்பார்கள். பெரியார் பற்றி அவதூறு பரப்பி விளம்பரம் தேட நினைக்கும் இழிவான, மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம்.


தந்தை பெரியாரின் கொள்கைகளே இன்றும் தமிழ்நாட்டை வழி நடத்துகின்றன. அதனால்தான் இதனை பெரியார் மண் என்று சொல்கிறோம். சில  மணாணாந்தைகளுக்கு இது புரிவதில்லை. பெரியார் என்ன சொன்னார் எப்போது சொன்னார் என்பது பற்றி தெரியாமலும் பெரியார் சொல்லாதவற்றையும் கூட அவர் சொன்னதாக அபாண்டமாக அவதூறு பரப்பியும் யாருக்கோ ஏஜெண்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள் தங்கள் சொந்த அரிப்பை தீர்த்துக் கொள்வதற்காக பெரியார் என்று ஆலமரத்தின் மீது உரசி பார்க்கின்றன.


தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க நினைத்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று கூறியுள்ளார் துரைமுருகன்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!

news

தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

news

எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!

news

எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!

news

Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!

news

தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?

news

"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!

news

சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

news

காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்