தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே நேற்று அரசுப் பள்ளியில் குத்தி கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையை இன்று வழங்கினார் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகில் உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்த ஆசிரியை ரமணியும், அதே பகுதியை சேர்ந்த மதன்குமாரும் காதலித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக மதன் குமார் வீட்டிலிருந்து பெண் கேட்டுள்ளனர். ஆனால் ரமணியின் வீட்டார் இந்தத் திருமணத்தை விரும்பவில்லை போலும். இதனால் பெண் தர மறுத்துள்ளனர்.

இதனால், ஆத்திரம் அடைந்த மதன்குமார், ரமணி பள்ளியில் இருந்தபோது, உள்ளே புகுந்து ரமணியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். உடனே ரமணி மயங்கி கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்த ஆசிரியர்கள் ரமணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி இறந்துள்ளார்.
மதன் குமார் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் ரமணியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததுடன், ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ரமணியை கொன்ற குற்றவாளிக்கும் கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தப் பின்னணியில் இன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆசிரியை ரமணியின் பெற்றோரிடம் அமைச்சர் கோவி. செழியன் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது ரமணியின் தாயார் கதறி அழுதார். அவருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}