சென்னை: வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறுகிய காலத்தில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசுகையில் கூறியதாவது:
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அம்மா உணவகத்தில் விலை இல்லா உணவு வழங்கப்பட்டு வருகிறது. கிட்டதட்ட 398 அம்மா உணவகங்களில் இன்று காலை மட்டும் சுமார் 65 ஆயிரம் பேர் விலை இல்லா உணவு அருந்தியுள்ளனர். 70 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 4.75 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டன. அதே போல இந்த முறையும் விலையில்லா உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 17 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் 30 சென்டிமீட்டர் வரை கூட மழை பதிவாகி உள்ளது. ஒரு சில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் மழை நீர் வடிந்து இயல்புநிலைக்கு திரும்பி உள்ளனர். பெரும் மழைக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பெரும் பாதிப்பிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் சுமார் 400 கிலோமீட்டர் தூரம் மழை நீர் வடிகால் பணிகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. தற்போது 782 கிலோமீட்டர் தூரம் வடிகால்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் அறுவறுத்தியுள்ளார். மழை நீர் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மழை நீர் வடிகால்கள் கட்டப்பட்ட காரணத்தால்தான் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. இந்த முறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறுகிய காலத்தில் மழை நீர் அகற்றப்பட்டுள்ளது.
சென்னையில் கன மழையால் சுரங்கப்பாதையில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த முறை பாதிப்பு ஏற்படுத்திய வேளச்சேரி, நாராயணபுரம் ஏரிகள் இம்முறை பாதிப்பு இல்லை. முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டனர். தமிழக அரசின் துரித நடவடிக்கைகளை பொதுமக்கள் தற்போது பாராட்டி வருகின்றனர். கடந்தாண்டு மழையின் போது ஏற்பட்ட பாதிப்பால் பாடம் கற்று இந்தாண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் பணிகளில் சில அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் அதனை நிறைவு செய்தது திமுக அரசுதான்.பல இடங்களில் நான் ஆய்வு செய்தேன் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. இரவில் இருந்த மழைநீர் காலையில் வடிந்த ஆதங்கத்தில் அதிமுகவினர் பேசுகின்றனர் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}