சென்னை: அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்கவுள்ளார்.
திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவான பொன்முடி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்து வந்தார். தொடர்ந்து அவர் சர்ச்சைக்கிடமான வகையில் பேசி வந்ததால் திமுகவுக்கும், திமுக ஆட்சிக்கும் தர்மசங்கடமாக இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் சைவம், வைணவம் குறித்து அவர் பேசியது கடும் கண்டனங்களைப் பெற்றது. திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக கண்டித்திருந்தார். இதையடுத்து பொன்முடியை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நீக்கி உத்தரவிட்டார். ஆனால் அமைச்சர் பதவியிலிருந்தும் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்தநிலையில் தற்போது பொன்முடி நீக்கப்பட்டுள்ளார்.
மின்சாரத்துறை அமைச்சராக இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்து மீண்டும் அமைச்சராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் பதவியை மீண்டும் செந்தில் பாலாஜி ஏற்றது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தது. அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் முக்கியமா என்ற கேள்வியைக் கேட்டு பதில் அளிக்குமாறு கெடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து செந்தில் பாலாஜியும் நீக்கப்பட்டுள்ளார்.

பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் அளித்த ராஜினாமா மனுக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய அமைச்சராக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார். அவர் மீண்டும் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இலாகாக்கள் மாற்றம்
போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக அழைக்கப்படுவார்.
வீட்டு வசத்தித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்து வரும் முத்துச்சாமிக்கு, மது விலக்கு ஆயத்தீர்வை கூடுதல் துறையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், வனத்துறை மற்றும் காதித் துறை அமைச்சராக மாற்றமப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பால்வளத்துறை வேறு யாருக்கும் ஒதுக்கப்படவில்லை என்பதால் மனோ தங்கராஜ் மீண்டும் பால்வளத்துறை அமைச்சராகிறார் என்று கூறப்படுகிறது.
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}