டெல்லி: இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் பட்டையைக் கிளப்பிய டான்ஸர் - ஸ்டைலிஷ் நடிகர் என்றால் அது மிதுன் சக்கரவர்த்திதான். அப்படி ஒரு கிரேஸ் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. காரணம், அவரது நடிப்பும், ஸ்டைலும், டான்ஸும்தான். பழம்பெரும் நடிகரான மிதுன் சக்கரவர்த்திக்கு மத்திய அரசு தாதாசாஹேப் பால்கே விருதினை அறிவித்துள்ளது.
இந்தியத் திரைத் துறைக்கு அவர் ஆற்றிய பெரும் சேவைக்காக இந்த விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெங்காலியைத் தாய் மொழியாகக் கொண்ட மிதுன், இந்தித் திரையுலகில் ஒரு சூப்பர் ஸ்டாராக விளங்கியவர். பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.
அக்டோபர் 8ம் தேதி நடைபெறவுள்ள 70வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவின்போது மிதுன் சக்கரவர்த்திக்கு தாதாசாஹேப் பால்கே விருது வழங்கிக் கெளரவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

74 வயதாகும் மிதுன் சக்கரவர்த்தியின் இயற்பெயர் கோரங்கா சக்கரவர்த்தி ஆகும். இவருக்கு ஹெலினா லூக் மற்றும் யோகிதா பாலி என இரு மனைவியர். ஹெலினா லூக்கை 1979ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டு, யோகிதாவை திருமணம் செய்து கொண்டார் மிதுன் சக்கரவர்த்தி. மொத்தம் நான்கு குழந்தைகள் மிதுனுக்கு உள்ளனர். நடிகராக, தயாரிப்பாளராக, அரசியல்வாதியாக என இவருக்கு பல முகங்கள் உள்ளன.
ஆரம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பின்னர் திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து விலகி பாஜகவுக்கு வந்து தற்போது அக்கட்சியில் நீடிக்கிறார். இந்த வருடம்தான் அவருக்கு பத்மபூஷன் விருது கிடைத்தது. இப்போது தாதா சாஹேப் பால்கே விருதும் கிடைத்து விட்டது.
தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்று அசத்தியவர் மிதுன் சக்கரவர்த்தி. 1976ம் ஆண்டு இவர் நடித்த மிர்கயா படத்திற்காக இந்த விருது அவருக்குக் கிடைத்தது. இவர் நடித்த டிஸ்கோ டான்ஸர், இந்தியா முழுவதும் மிதுனை பிரபலமாக்கியது. இந்தப் படம் தான் பின்னர் தமிழில் நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு நடிப்பில் ரீமேக் ஆகி அவருக்கு புகழைக் கொடுத்தது என்பது நினைவிருக்கலாம்.
மிதுன் சக்கரவர்த்தி பெரும்பாலும் இந்தி, பெங்காலியில்தான் அதிக படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ஒடியா மொழியிலும் நடித்துள்ளார். தமிழிலும் ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார். அது யாகாவராயினும் நா காக்க. இதில் நடிகர் ஆதி ஹீரோவாக நடித்திருந்தார். முதலியார் என்ற கதாபாத்திரத்தில் மிதுன் நடித்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}