சென்னை: பாமக கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து வேறுபாடு பல நாட்களாக நீடித்து வருகிறது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திண்டாடி வருகின்றனர். அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார். அதே நேரத்தில் நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கி வருகிறார் அன்புமணி.
இந்நிலையில், ராமதாசுக்கு பக்கபலமாக இருக்கும் எம்எல்ஏ அருளை, நேற்று முன்தினம் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், பாமக நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு. எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. ஜிகே மணி மூலம் கடிதம் கொடுத்த பிறகு தான் நீக்க முடியும். கட்சியிலிருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாமக கொறடா பொறுப்பில் இருந்தும் எம்.எல்.ஏ அருளை மாற்ற வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டபேரவை செயலரிடம் மனு அளித்துள்ளனர். பாமக எம்.எல்.ஏக்கள் வெங்கடேசன், சதாசிவம், சிவகுமார் ஆகியோர் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்துள்ளனர். பாமக கொறடாவாக மயிலம் தொகுதி எம்.எல்.ஏ சிவக்குமாரை நியமிக்ககோரி மனு அளித்துள்ளனர்.
இதனையடுத்து ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பாமக கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் தெரிவித்து வருகிறார். அருள் எம்எல்ஏ சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து மனு அளிக்க உள்ளார்.பாமக சட்டப்பேரவைக்குழுத் தலைவர் ஜிகே மணி, அருள் கொறடாவாக தொடர்வார் என்று அளித்திருக்கக்கூடிய கடிதத்தை சபாநாயகரை சந்தித்து நேரில் வழங்க உள்ளார்.
செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்
நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!
Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை
திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!
அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?
சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக.,விற்கு கை கொடுக்குமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 10, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும்
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
{{comments.comment}}