காலை உணவுத் திட்டம் பிரமாதம்.. அப்படியே இதையும் பரிசீலியுங்கள் முதல்வரே.. கமல்ஹாசன்

Aug 26, 2023,11:08 AM IST
சென்னை: தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டத்திற்குப் பாராட்டு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் குறிப்பிட்ட மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் தற்போது தமிழ்நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், திருக்குவளையில் மறைந்த கருணாநிதி படித்த பள்ளியில் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டம் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக பள்ளிப் பிள்ளைகள் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காலை உணவு சூப்பராக இருப்பதாக வரவேற்றுள்ளனர். மேலும் இந்தத் திட்டம் மிகப் பெரிய சமூக நலத் திட்டமாகவும் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ளது.



தற்போது தொடக்கப் பள்ளிகளில் மட்டும் இந்தத் திட்டம்  அமல்படுத்தப்படுகிறது. இதை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில் இத்தட்டத்தை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில்,  இந்திய மாநிலங்களிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். இதனால் வரும்கால தலைமுறை மாணவர்கள் பசியின்றி படித்து முன்னேற முடியும். 

இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாரம்பரிய நெல் ரகங்களையும்,  ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களையும், நாட்டு ரக பழவர்க்கங்களையும் சாகுபடி செய்யும் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து இத்திட்டத்தில் பயன்படுத்தினால் மாணவர்களுக்குச் சத்தான சுவையான உணவும் கிடைக்கும். விவசாயிகளின் நலன்களும் பாதுகாக்கப்படும். இதன் மூலம் பாரம்பரிய நெல் வகைகளும், தானியங்களும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறவும் வாய்ப்புண்டு. இதன் சாத்தியங்களையும் தமிழக அரசு ஆராய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.



சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்