ஈரோடு கிழக்கு.. கமல்ஹாசன் ஆதரவு யாருக்கு.. பெரும் நம்பிக்கையில் காங்கிரஸ்!

Jan 21, 2023,10:20 AM IST
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் யாரை ஆதரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணி சார்பில் அதிமுகவே களம் காணவுள்ளது. பாஜக நிலைப்பாடு தெரியவில்லை. ஆனால் தேர்தல் பணிக்குழுவை அக்கட்சி அமைத்துள்ளது. எனவே அக்கட்சி தனித்துப் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதுதவிர நாம் தமிழர் கட்சி கட்டாயம் வேட்பாளரை நிறுத்தும் என்பதால் இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி கண்டிப்பாக இருக்கும் என்று தெரிகிறது.  மறுபக்கம் மக்கள் நீதி மய்யம், ஓ.பன்னீர் செல்வம் பிரிவு அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளின் நிலைப்பாடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. 

சமீப காலமாக திமுகவை கமல்ஹாசன் கடுமையாக விமர்சிப்பதில்லை. மேலும் காங்கிரஸ் கட்சியுடனும் அவர் நெருங்கி வருகிறார். சமீபத்தில் டெல்லியில் நடந்த ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டு உணர்ச்சிகரமாக பேசினார். ராகுல் காந்தியுடன் தனியாக ஒரு பேட்டியிலும் கலந்து கொண்டார். எனவே கமல்ஹாசன் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் தனது கட்சியின் ஆதரவை காங்கிரஸுக்கு அளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. ஆனால் கணிசமான வாக்குகளைப் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு மயிரிழையில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியுற்றார் என்பது நினைவிருக்கலாம்.

கடந்த காலங்களில் ஆம் ஆத்மி கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி நெருக்கம் காட்டிய நிலையில் தற்போது காங்கிரஸ் பக்கமும் கமல்ஹாசன் சாய்ந்து வருவதால்  இந்தத் தேர்தலில் கமல்ஹாசனின் நிலைப்பாடு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்