சென்னை:
தமிழ் இலக்கிய உலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி முத்திரை பதித்த மூத்த எழுத்தாளர் இரா. முருகன் ( 74), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
கணினித்துறையில் பணிபுரிந்துகொண்டே இலக்கியப் பணியைத் தொடர்ந்த இவர், கமல்ஹாசனின் 'உன்னைப் போல் ஒருவன்', அஜித்தின் 'பில்லா 2' போன்ற திரைப்படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.
இவரது மறைவுக்குத் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், ராஜ்யசபா உறுப்பினரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஈரா முருகனும் நானும் சேர்ந்து எழுதிய உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம். ‘மறதி ஒரு தேசிய வியாதி’.

அந்த மறதி எனக்கும் முருகனுக்கும் வராது என்று நம்பியிருந்த எங்களுக்கு முருகனின் ‘மறதி வியாதி’ அதிர்ச்சிதான். கவலைப்படாதீங்க.. இந்த மறதியோட தேக்கி வச்சிருந்த கோபதாப குரோதங்களும் மறந்துரும். சோகங்களும் கூட என்றேன்.
அது போனா போயிட்டு போறது கூடவே நம்ம சந்தோச நாட்களும் ஜோக்ஸூம் மறந்துபோயிடுமோன்ற பயமாயிருக்கு என்றார் ஈராமு. எல்லாத்தோடயும் சேர்த்து பயமும் மறந்த வீரரா வாழவேண்டியதுதான். இது பெரிய சோகமில்ல முருகன் என்றேன்.
‘ஓ நல்லாருக்கே You are saying I might even forget to forget? என்று கேட்டார். இருவரும் சிரித்தோம். சத்தமாக நான். மனதிற்குள் அவர். முருகனின் கடைசி சோகம் அதுதான். சோகமும் பிரிவும் இனி என்போன்ற நண்பர்களுக்குத்தான்.
நாங்கள் நண்பர்களாக எங்களை ஊக்குவித்தவர் திரு. சுஜாதா ரங்கராஜன். அதுவும் எப்படி? உங்களுக்குப் பிறகு, நீங்கள் விட்ட இடத்தில் தொடங்கக் கூடிய எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிட்டீர்களா என அவரிடம் கேட்டேன். சுஜாதா தயக்கமில்லாமல் சொன்னார், ‘ஓ ஈரா முருகன்”
சுஜாதா புகழ்ந்த அந்த ஈரா முருகன் என் நண்பர். இவர்களை எனக்குத் தெரியும் என்பதே என் பெருமை.
சில பேர் மொழியைக் காதலிப்பார்கள். சிலரை மொழியே காதலிக்கும். ஈரா முருகனின் காதல் ஒருதலைக் காதல் அல்ல.
அன்புடன்,
முருகனின் நண்பன், தமிழின் காதலன்
கமல்ஹாசன்.
மின்சார கொள்முதலில் பெரிய ஊழல்: சுதந்திரமான ஆணையம் விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
5 தொகுதி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் ரெடி.. நெருக்கடியில் தமிழக அரசியல் கட்சிகள்
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்:நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து ஆளுநர் தேர்தலிலும் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி
தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுக, அதிமுக சதி? பேரம் பேசப்பட்டதாக தவெக எம்எல்ஏ., பரபரப்பு குற்றச்சாட்டு!
மறதி ஒரு தேசிய வியாதி என்று சொன்ன நண்பருக்கே அது வந்தது வேதனை.. கமல்ஹாசன்
தித்திக்கும் தீபாவளிக்கு.. பாசிப்பருப்பு லட்டு!
தேடி வரும் தெய்வத்தின் அறிகுறி!
சூரிய பகவன் சிவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்ற.. பருத்தியப்பர் திருக்கோவில்!
மழைக்கு இதமாக சமைத்துப் பாருங்கள்.. சுடச்சுட மிளகு பொங்கல்!
{{comments.comment}}