தித்திக்கும் தீபாவளிக்கு.. பாசிப்பருப்பு லட்டு!

Nov 04, 2026,12:35 PM IST

- பசுங்கிளி


தீபாவளி பண்டிகை என்றாலே நம் ஞாபகத்திற்கு வருவது நாவில் கரையும் லட்டு வகைகள் தான். அதில் இந்த பாசிப்பருப்பு லட்டு, மணமும் சுவையும் நிறைந்தது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் ஈர்க்கும் இந்த ஆரோக்கியமான லட்டை நம்முடைய பாரம்பரிய முறையில் எப்படி எளிமையாக செய்வது என்று பார்க்கலாம் வாங்க!


தேவையான பொருட்கள்


பாசிப் பருப்பு – 1/2 கிலோ

சர்க்கரை (சீனி) – 3/4 கிலோ

முந்திரி – 100 கிராம்

ஏலக்காய் – 10

நெய் – 1/4 லிட்டர்


செய்முறை 




அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எடுத்து வைத்துள்ள பாசிப்பருப்பைச் சேர்த்து மிதமான தீயில் பொன்நிறமாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு அதை நன்றாக ஆற விடவும்.


ஆறிய பாசிப்பருப்பை மிக்சி ஜாரில் சேர்த்து, கொரகொரப்பாக இல்லாமல் நைசாக அரைத்துக் கொள்ளவும். அதே மிக்சியில் சர்க்கரையையும், அதனுடன் ஏலக்காயையும் சேர்த்து நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.


ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பு மாவு, சர்க்கரை-ஏலக்காய் பொடி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.


இப்போது கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடாக்கவும். அதில் முந்திரியைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து, அந்த மாவின் மேல் ஊற்றவும்.


மீதமுள்ள சூடான நெய்யை மாவின் மீது ஊற்றி, முதலில் கரண்டியால் கிளறவும். மாவு மிதமான சூடிற்கு (கை பொறுக்கும் சூடு) வந்தவுடன், கைகளினால் நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

 மாவு சூடாக இருக்கும்போதே லட்டு பிடித்தால்தான் உருண்டைகள் பிரியாமல் கெட்டியாக வரும்!


இப்போது நாவில் கரையும் சுவையான, சத்தான, மணமான பாசிப்பருப்பு லட்டு ரெடி! உடனே சுவைத்து மகிழுங்கள்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

5 தொகுதி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் ரெடி.. நெருக்கடியில் தமிழக அரசியல் கட்சிகள்

news

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்:நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து ஆளுநர் தேர்தலிலும் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி

news

தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுக, அதிமுக சதி? பேரம் பேசப்பட்டதாக தவெக எம்எல்ஏ., பரபரப்பு குற்றச்சாட்டு!

news

மறதி ஒரு தேசிய வியாதி என்று சொன்ன நண்பருக்கே அது வந்தது வேதனை.. கமல்ஹாசன்

news

தித்திக்கும் தீபாவளிக்கு.. பாசிப்பருப்பு லட்டு!

news

தேடி வரும் தெய்வத்தின் அறிகுறி!

news

சூரிய பகவன் சிவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்ற.. பருத்தியப்பர் திருக்கோவில்!

news

மழைக்கு இதமாக சமைத்துப் பாருங்கள்.. சுடச்சுட மிளகு பொங்கல்!

news

காலம் கற்றுத் தந்த பாடங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்