சென்னை: மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 17 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் துவங்கிய பொழுதும், கடந்த வாரம் முதல் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, ஈரோடு, கடலூர், திருச்சி, திருவள்ளூர், நாகை, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில்
வெயில் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெயிலும்,மழையும் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் வலுவிழந்தது. இருப்பினும், அதே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசௌரிகம் ஏற்படலாம்.
ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சஞ்சு சாம்சனை பேசாம கேப்டனாக்குங்கப்பா.. செமயா சூப்பரா இருக்கும்.. சொல்கிறார் ஸ்ரீகாந்த்!
நான் பிடிவாதக்காரன் கிடையாது...பதவி மீது ஆசை எதுவும் இல்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
மோடியால் முடியாததை நான் சாதித்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வயிற்றெரிச்சல்: முதல்வர் முக ஸ்டாலின்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி.. ஒரு புகாரும் வரவில்லை.. தேர்தல் ஆணையம்
தமிழ் வளர்ச்சியில் பெண் கவிஞர்களின் பங்கு!
ஹலோ மக்களே.. தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?.. இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க!
திருவண்ணாமலைக்கு திடீரென போன லோகேஷ் கனகராஜ்.. கூலி வெற்றிக்காக பிரார்த்தனை!
32வது பிறந்த நாளை கொண்டாடும் ஹன்சிகா மோத்வானி.. போராட்டங்களே வாழ்க்கை!
புதிய வருமான வரி மசோதா 2025.. திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது
{{comments.comment}}