அடிக்கும் வெயிலுக்கு இதமாக.. தமிழ்நாட்டில் 10ம் தேதி முதல் 3 நாட்கள் ஜில் ஜில் மழைக்கு வாய்ப்பு..!

Mar 06, 2025,05:09 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் வரும் 10 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் வறண்ட கிழக்கு காற்றின் ஊடுருவலால் மார்ச் மாத தொடக்கத்திலிருந்து வெயலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதனால் மக்கள் மதிய வேலைகளில் வெளியில் செல்ல முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  இன்றும் நாளையும் தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அப்போது ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

மிதமான மழை:



தமிழ்நாடு, புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் பத்தாம் தேதி முதல் மூன்று நாட்கள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்