சென்னை: இரவு 11 மணிக்குள் தமிழ்நாட்டில் சென்னை உள்பட 37 மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை கொட்டித் தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்களில் கடந்த அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னையைப் பொறுத்தவரை தென் சென்னையின் பல பகுதிகளில் பலத்த மழை கொட்டியுள்ளது. பல இடங்களில் கன மழையாக பெய்ததால் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

வானிலை மையம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:
இரவு 11 மணி வரையிலான காலகட்டத்தில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்பத்தூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}