சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் மே நான்காம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, வேலூர், திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அப்பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கோடை மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் மே நான்காம் தேதி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி,

இன்றும், நாளையும் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 3 முதல் மே 4ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}