ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான முகமது அசாருதீன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் இன்று அமைச்சராகப் பதவியேற்றார்.
ராஜ்பவனில் நடைபெற்ற இந்த விழாவில், ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் அசாருதீனுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
அசாருதீன் இணைந்ததன் மூலம், தெலங்கானா அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டு அமைச்சர்களுக்கு இடம் உள்ளது. மாநில சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையின்படி, அதிகபட்சமாக 18 அமைச்சர்கள் வரை இருக்கலாம்.

அசாருதீனின் இந்த அமைச்சரவை பிரவேசம், காங்கிரஸுக்கு ஒரு முக்கியமான அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இது முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதி, தேர்தலில் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதியின் பிஆர்எஸ் எம்எல்ஏ மகந்தி கோபிநாத், கடந்த ஜூன் மாதம் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
எனினும், தனது நியமனத்திற்கும், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அசாருதீன் திட்டவட்டமாக மறுத்தார். "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது கட்சியின் உயர் கமிட்டிக்கும், மக்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றி. அமைச்சர் ஆனதுக்கும், ஜூப்ளி இடைத்தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவை இரண்டும் தனித்தனி விஷயங்கள், அவற்றை இணைத்துப் பார்க்கக் கூடாது," என்று அவர் பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "எனக்கு எந்தப் பொறுப்பு கொடுத்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக நேர்மையாக உழைப்பேன். ஜி. கிஷன் ரெட்டி என்ன சொன்னாலும் சரி. எனக்கு யாருடைய தேசபக்தி சான்றிதழும் தேவையில்லை," என்றும் அவர் கூறினார்.
Destination Maldives.. போவோமா ஊர்கோலம்.. அதுவும் நம்ம பட்ஜெட்டுக்குள்.. மாலத்தீவுக்கு!
சென்னையில் ரூ.39 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பனியும் கொட்டுது.. மழையும் பெய்யுது.. அப்படியே மூக்கும் ஒழுகுதா.. இந்தாங்க பாட்டி வைத்தியம்!
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
அதிமுக - பாஜக கூட்டணியை கண்டு திமுக நடுக்கிப்போயுள்ளது: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மார்கழித் திங்கள் அல்லவா.. மதி கொஞ்சும் நாள் அல்லவா.. மார்கழி மாத சிறப்புகள்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம் தொட்ட நிலையில் இன்று சற்று குறைவு!
ஜோர்டானில் பிரதமர் நரேந்திர மோடி.. 2 நாள் சுற்றுப்பயணத்தில் என்னவெல்லாம் காத்திருக்கு?
365 நாட்களும் கவிதை.. வீடு தேடி வரும் சான்டாவின் சர்ப்பிரைஸ் பரிசுகள்.. கலக்கும் Creative Writers
{{comments.comment}}