கொல்கத்தா: இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசைக் குழுவில் பேஸ் கிடாரிஸ்ட்டாக இருந்து வரும் மோகினி டே தனது விவாகரத்தை அறிவித்துள்ளார். கணவரை விட்டுப் பிரிந்து விட்டதாக அவர் சமூக வலைதளம் மூலமாக அறிவித்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து அதிர்ச்சியே விலகாத நிலையில் தற்போது அவரது குழுவிலிருந்து இந்த விவாகரத்து செய்தி வந்துள்ளது. அடுத்தடுத்து வந்த இந்த விவாகரத்து செய்திகளால் இசைப் பிரியர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மோகினி டே. 28 வயதுதான் ஆகிறது. ஆனால் உலக அளவில் மிக முக்கியமான கிடார் கலைஞராக வலம் வருகிறார் மோகினி டே. ஜாகிர் உசேன், கியுன்ஸி ஜோன்ஸ், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
போர்ப்ஸ் இந்தியா இவரை 30 வயதுக்குள் புகழ் பெற்ற இசைக் கலைஞர்களில் ஒருவராக அங்கீகரித்து பாராட்டி கெளரவம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது கணவர் மார்க்கிடமிருந்து பிரிவதாக மோகினி அறிவித்துள்ளார். தானும் மார்க்கும் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். இது பரஸ்பரம் இருவரும் விரும்பி எடுத்த முடிவு. நாங்கள் திருமண உறவிலிருந்து பிரிந்தாலும் கூட தொழில் முறையிலான உறவு நீடிக்கும். நண்பர்களாக இருப்போம். எங்களது இசைப் பயணத்தை இது பாதிக்காது என்று கூறியுள்ளார் மோகினி டே.
பேஸ் கிடார் கலைஞராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகி என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் மோகினி டே. இந்தியாவில் முன்னணியில் உள்ள இளம் இசைக் கலைஞர்களில் இவரும் ஒருவர். 9 வயதிலேயே தனது இசைப் பயணத்தைத் தொடங்கியவர் மோகினி. அவரது தந்தை சுஜாய் டேவும் ஒரு கிடார் கலைஞர்தான். தந்தையிடமிருந்து இசையை கறஅறுக் கொண்ட அவர் டிரம் கலைஞர் ரஞ்சித் பரோத் மூலம் வெளி உலகுக்கு அறிமுகமானார். தனது படா பூம் இசை ஆல்பத்தில் மோகினியை அறிமுகப்படுத்தி அவருக்கு நல்லதொரு உயர்வைக் கொடுத்தார் ரஞ்சித்.
ரஞ்சித் பரோத்தான் மோகினியை, ஏ. ஆர். ரஹ்மானுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர். ஏ. ஆர். ரஹ்மான் இசைக்குழுவில் முக்கிய கிடாரிஸ்ட்டாக இருந்து வருகிறார் மோகினி. கோச்சடையான் படத்தில் இவர் பங்காற்றியுள்ளார். அதேபோல அரிமாநம்பி படத்திலும் இவரது கிடார் இசை இடம் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}