30 வருஷத்துக்கு முன்னாடி.. பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்தாரா.. நியூயார்க் மேயர்!

Nov 24, 2023,03:26 PM IST

நியூயார்க்: நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் மீது பாலியல் அத்துமீறல் எழுந்துள்ளது. அதாவது 30 வருடங்களுக்கு முன்பு மேயர் ஆடம்ஸ் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக ஒரு பெண் வழக்குத் தொடர்ந்துள்ளார்.


இந்தப் புகாரானது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது. ஆனால் அத்தனை புகார்களையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார் ஆடம்ஸ். நியூயார்க் கோர்ட்டில் இதுதொடர்பாக அந்தப் பெண் ஊழியர் தொடர்ந்துள்ள வழக்கில், 1993 ஆம் ஆண்டு எரிக் ஆடம்ஸ் நியூயார்க் நகரில் வைத்து தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தனக்கு 5 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகையை எரிக் ஆடம்ஸ் தர உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உள்ளார். அந்தப் பெண்ணின் பெயர், அவர் குறித்த விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. 


இதுகுறித்து எரிக் ஆடம்சின் அலுவலக செய்தி தொடர்பாளர் கூறுகையில், மேயருக்கும் புகார் கூறிய நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் யார் என்று தெரியாது. இந்தப் புகார்தாரர் உள்பட வேறு யாரிடமும், மேயர் உடல் ரீதியாக எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை. இந்த பெண் குறித்து எந்த தகவலும் மேயரிடம் இல்லை . அவரைப் பற்றி மேயருக்குத் தெரியாது, நேரில் பார்த்ததும் கிடையாது என்று கூறியுள்ளார். 




மேயர் எரிக் ஆடம்ஸ், ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார். 2022 ஆம் ஆண்டு நியூயார்க் நகர மேயராக பதவி ஏற்றார். நியூயார்க் நகர மேயர் பொறுப்புக்கு உயர்ந்த இரண்டாவது கருப்பர் இனத்தவர் என்ற பெருமை எரிக் ஆடம்சுக்கு உண்டு. இவர் மீது ஏற்கனவே நிதி மோசடி புகார் ஒன்றும் உள்ளது. அது விசாரணையில் இருந்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு மேயர் பதவிக்கான பிரச்சாரத்தின் போது அவர் துருக்கி அரசுடன் இணைந்து கொண்டு நிதி மோசடியில் ஈடுபட்டார் என்பது அந்த வழக்கின் முக்கிய அம்சம்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்