டெல்லி: இந்தியா டுடே - மூட் ஆப் தி நேஷன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் உயர்ந்திருப்பதாகவும், காங்கிரஸ் கூட்டணியின் பலம் சரிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை லோக்சபாவுக்குத் தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 343 இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கு 188 இடங்களே கிடைக்கும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு (தேசிய ஜனநாயகக் கூட்டணி) மொத்தமாகவே 292 இடங்கள்தான் கிடைத்தன. காங்கிரஸ் கூட்டணிக்கு (இந்தியா கூட்டணி) 232 இடங்கள் கிடைத்தன என்பது நினைவிருக்கலாம். பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தற்போது மத்தியில் உள்ளது.

இந்த நிலையில் மூட் ஆப் தி நேஷன் கருத்துக் கணிப்பில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை லோக்சபா தேர்தல் நடப்பதாக இருந்தால் பாஜகவுக்கு 280 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 343 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்குமாம். காங்கிரஸ் உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கு 188 இடங்களே கிடைக்கும் என்று இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
ஜனவரி 2ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலான கால கட்டத்தில் இந்த சர்வே எடுக்கப்பட்டதாம். நாடு முழுவதும் அனைத்து லோக்சபா தொகுதிகளையும் உள்ளடக்கி கிட்டத்தட்ட 1 லட்சத்து 25 ஆயிரத்து 123 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டதாக மூட் ஆப் தி நேஷன் கருத்துக் கணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்குகள் 41 சதவீதமாக உள்ளது. இது கடந்த தேர்தலில் பெற்றதை விட 3 சதவீதம் கூடுதலாகும். இந்தியா கூட்டணிக்கு கடந்த தேர்தலில் கிடைத்ததை விட ஒரு சதவீத அளவுக்கு மட்டுமே வாக்கு சதவீதம் கூடியுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் மட்டும் 20 சதவீதம் ஆகும். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு தொடர்ந்து தோல்வி முகத்திலேயே இந்தியா கூட்டணி இருந்து வருவதால் இந்த தளர்ச்சியை அது சந்தித்துள்ளதாம். மேலும் கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லாதது, உட்கட்சிப் பூசல்கள் என இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
பாஜகவைப் பொறுத்தவரை அக்கட்சிக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாம். நாளை தேர்தல் நடந்தால் பாஜகவுக்கு 281 தொகுதிகள் கிடைக்கும் என்று சர்வே கூறுகிறது. அதேசமயம், கடந்த தேர்தலில் 99 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சிக்கு 78 தொகுதிகளே கிடைக்குமாம்.
பிரதமர் மோடியின் செல்வாக்கும், அவர் மீதான கவர்ச்சியும் இன்னும் குறையவில்லை என்றும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நீடித்து வந்த போதிலும் கூட பெரிய அளிவில் மக்களிடையே அதிருப்தி அலை இல்லை என்றும் இந்த சர்வே தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அதன் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. கட்சி கட்டமைப்பு சரியில்லை. எந்தவிதமான ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்தையும் காங்கிரஸ் இன்னும் காணவில்லை என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நடந்த ஹரியானா, டெல்லி சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோல்வியுற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
{{comments.comment}}