சென்னை: ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்திலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பதாக வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தை வேல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.
ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான ஆர்.ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் சிறந்த காமெடியனாக கலக்கி வருகிறார். குறிப்பாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தில் தனது காமெடி நடிப்பால் ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். ஒரு காமெடியனாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய ஆர்.ஜே பாலாஜி ஒரு கட்டத்தில் எல்கேஜி படத்தின் மூலம் நாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இதனைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களிலும் நடித்தார். இப்படங்கள் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு என் கே சரவணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் மூக்குத்தி அம்மன். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இணை இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்தார். இவருடன் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்மிருதி வெங்கட், மயில்சாமி, ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் ஓடிடியில் ரிலீசானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றது. இதில் ஆர் ஜே பாலாஜியின் அசத்தல் காமெடியும், அம்மன் கெட்டப்பில் நயன்தாராவின் தனித்துவமான நடிப்பும் இப்படத்திற்கு பிளஸ் என்றே சொல்லலாம்.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் மீண்டும் வருகிறது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம்.இந்த வருடம் மட்டுமே சிங்கப்பூர் சலூன், ஜோஸ்வா, இணைப்போல் காக்க பிடி சார் என பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது வேல்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினரின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகை நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக வலம் வர இருக்கிறார்.
இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் பாகம் இரண்டிலும் நயன்தாரா நடிப்பதாக வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}