பாகிஸ்தான்.. பஸ் பாலத்திலிருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்து.. 40 பேர் பலி

Jan 29, 2023,01:26 PM IST
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஒரு பயணிகள் பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து கீழே விழுந்து தீப்பிடித்துக் கொண்டதில் அதில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டாவிலிருந்து  கராச்சிக்கு இந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. லாஸ்பெலா என்ற இடத்தில் ஒரு பாலத்தில் பஸ் வந்து கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் பஸ் தீப்பிடித்துக் கொண்டதில் அதில்  பயணிகள் சிக்கிக் கொண்டனர். 41 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிப் போய்விட்டன. 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.



பாகிஸ்தானில் பஸ் விபத்தும், சாலைவிபத்தும் அதிக அளவில் நடைபெறுகின்றன.  அங்கு சாலைகளும் மோசம், பேருந்துகளும் சரியாக இருப்பதில்லை என்பதே இதற்கு காரணம்.  ஒரே விபத்தில் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள்தான் அதிகம். காரணம், அளவுக்கு மீறி ஆட்களை ஏற்றிச் செல்வது. 2018ம் ஆண்டு பாகிஸ்தானில் சாலை விபத்துக்களில் 27,000 பேர் பலியானார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்