அடேங்கப்பா சூப்பரு.. பொங்கலுக்கு மெட்ரோ ரயிலில் பயணித்த.. 8 லட்சம் பேர்!

Jan 19, 2023,10:27 AM IST
சென்னை: பொங்கல் விடுமுறையின் போது சென்னை மெட்ரோ ரயில்களில் மொத்தமாக  8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



ஜனவரி 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை பொங்கல் விடுமுறை தினங்கள்ஆகும். இந்த சமயத்தில் சென்னை மெட்ரோ ரயிலை பல லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர். மொத்தமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளனர். இதில் விசேஷம் என்னவென்றால் ஜனவரி 13ம் தேதி மட்டும் 3 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை 21,731 பேர் பயன்படுத்தி பயணித்துள்ளனர். கிண்டியில் 14,649, திருமங்கலம் 13,607, விமான நிலையம் 12,909 பயணிகள் பயனித்துள்ளனர். 

ஜனவரி 17ம் தேதி 1.65 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். தற்போது சென்னை மெட்ரோ ரயில்களில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை சராசரியாக 2 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ஏற்பாடுகளை மெட்ரோ நிர்வாகம் செய்திருந்தது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்