சென்னை: சென்னை தியாகராய நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தெற்கு உஸ்மான் பாலத்திலிருந்து சிஐடி நகர் முதல் மெயின் ரோடு வரையிலான பாலத்தை விரிவாக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் ஜனவரி 28ம் தேதி முதல் செப்டம்பர் 27ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு உஸ்மான் சாலை பாலத்திலிருந்து சிஐடி நகர் 3வது மெயின் ரோடு செல்வதற்காக தெற்கு உஸ்மான் சாலை வழியாக வரும் வாகனங்கள், கண்ணம்மாபேட்டை ஜங்ஷன் மற்றும் தென் மேற்கு போக் சாலை வழியாக செல்ல வேண்டும்.
தெற்கு உஸ்மான் பாலத்திலிருந்து தெற்கு உஸ்மான் சாலைக்கு செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், மேட்லி ஜங்ஷன் - பர்கிட் சாலை - மூப்பாரப்பன் தெரு -லிங்க் ரோடு - அண்ணா சாலை நந்தனம் ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும்.
அரங்கநாதன் சுரங்கப் பாதையிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை, கண்ணம்மாப்பேட்டை ஜங்ஷன் வழியாக சிஐடி நகர் 3வது மெயின் ரோடு செல்ல வேண்டிய எம்டிசி பஸ்கள், மேற்கு சிஐடி நகர், வடக்கு தெரு வழியாக திருப்பி விடப்படும்.
அண்ணா சாலை, சிஐடி முதலாவது மெயின் ரோடிலிருந்து தி.நகர் பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல தெற்கு உஸ்மான் சாலையில் பயணிக்கலாம் என்று போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}