பானிபட், ஹரியானா: ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் அபாரமாக ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்து விட்டார்.
இருப்பினும் இந்த சீசனில் சிறந்த தூரத்தை நீரஜ் சோப்ரா நேற்று எட்டிப் பிடித்தார். அவர் 89.45 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தார். ஆனால் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஒலிம்பிக் போட்டிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு காயங்களால் அவதிப்பட்டு வந்தார் நீரஜ் சோப்ரா. இதனால் கடந்த மே மாதம் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் கூட அவர் பங்கேற்கவில்லை.

காயங்களிலிருந்து மீண்டு இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வந்தார். இருப்பினும் தங்கம் நழுவிப் போனது. ஆனாலும் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவை நாடே வாழ்த்தி மகிழ்கிறது.
ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் உள்ள நீரஜ் சோப்ராவின் இல்லத்தில் ஊர் மக்கள், உறவினர்கள், குடும்பத்தினர் கூடி இனிப்புகள் பரிமாறிக் கொண்டு மகிழ்ந்தனர். நீரஜ் சோப்ராவின் தந்தை சதீஷ் குமார் கூறுகையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இது மகிழ்ச்சி தருகிறது. அவரது வலிதான் வெள்ளிப் பதக்கத்தோடு அவரை நிறுத்தி விட்டது. இல்லாவிட்டால் நிச்சயம் தங்கம் வென்றிருப்பார் என்றார்.

நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி கூறுகையில், எனது மகன் சொன்னபடி பதக்கம் வென்று விட்டான். இனி அவனுக்குப் பிடித்ததை செய்து கொடுத்து சாப்பிட வைக்க ஆர்வத்தோடு காத்திருக்கிறேன். நாங்கள் எல்லோரும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறோம். வெள்ளி என்றாலும் கூட அதுவும் தங்கம் போலத்தான். தங்கம் வென்ற வீரரும் எனது மகன்தான் என்றார் புன்னகைத்தபடி.
என்ன ஒரு அழகான வாழ்த்து பாருங்கள்!
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}