தங்கமாவது, வெள்ளியாவது.. எல்லை கடந்து ஓடி வந்த பாசமும் நேசமும்.. அம்மான்னா சும்மா இல்ல!

Aug 10, 2024,01:52 PM IST

டெல்லி: இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் தாயாரும், பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமின் தாயாரும் சர்வதேச அளவில் பாப்புலராகி விட்டனர். அவர்களது எதார்த்தமான பேச்சும், அன்பும், பாசமும்தான் அவர்களை உயரத்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. அம்மாக்கள் எப்போதுமே அம்மாக்கள்தான்.. அவர்களிடம் இந்த உலகத்தை விடுங்கள், துவேஷத்தையும், வெறுப்பையும் துவைத்துப் போட்டு அமைதிப் பூங்காவாக்கி விடுவார்கள் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.


அர்ஷத் நதீமும் என் பிள்ளை தான் என நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தேவி பேசி இருந்த நிலையில், நீரஜ் சோப்ராவும் எனக்கு பிள்ளை மாதிரி தான் என அர்ஷத் நதீமின் தாய் ரஸியா பர்வீன் கூறியது இரு நாட்டு நல்லுள்ளங்களையும் நெகிழ வைத்துள்ளது, சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெறுப்பு, துவேஷம், விஷமத்தனம் எல்லாம் இவர்களிடம் செல்லாது.. இதுபோன்ற நல்லுள்ளங்கள் எப்போதுமே அன்பையும், அமைதியையும் மட்டுமே வெளிப்படுத்தும் என்று பலரும் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.




33வது ஒலிம்பிக் போட்டி தற்போது பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை நான்கு பதக்கங்களை வென்றுள்ளது.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனுபாக்கர் இரண்டு வெண்கல பதக்கங்கள், சரப்ஜோத் சிங் ஒரு வெண்கல பதக்கம் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றனர். இதனை தொடர்ந்து பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் வினோத் போகத் கலந்து கொண்டார்.அதில் இறுதி சுற்று வரை முன்னேறி 50 கிலோ எடை பிரிவில் 100 கிராம் எடை அதிகமாக இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இச்சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


நேற்று ஆடவர் ஹாக்கி போட்டி நடைபெற்றன. இந்திய அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று, வெண்கல பதக்கத்தை வென்றது. அதற்கு முன்னதாக, ஆண்களுக்கான ஈட்டியெறிதல் போட்டியில், இந்தியாவின் தங்க மகன் என அழைக்கப்படும் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டியில் 89.45 மீ தொலைவில் ஈட்டி எறிந்து இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அதே சமயம் 92.97மீ என்ற தொலைவில் ஈட்டி எறிந்து பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். மற்றும்  ஆண்டர்சன் பீட்டர் 88.54 மீட்டர் தொலைவில் ஈட்டி எறிந்து வெண்கல பதக்கத்தை வென்றார்.


இதுகுறித்து நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி கூறுகையில், அர்ஷத் நதீமும் என் பிள்ளை தான்  என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இதேபோல கூறியுள்ளார் அர்ஷத் நதீமின் தாயாரும். நீரஜும் எனது பிள்ளை மாதிரிதான். அவனும், எனது மகனும் நண்பர்களும் கூட. நீரஜ் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று அர்ஷத்தின் தாயார் கூறியது பலரையும் நெகிழ வைத்துள்ளது.


இந்தியா, பாகிஸ்தான் என்றாலே வெறுப்பும், துவேஷமும்தான் முதலில் வந்து நிற்கிறது. அந்த அளவுக்கு சூழ்நிலைகளை சிலர் உருவாக்கி வைத்துள்ளனர். ஆனால் அதைத் தாண்டி இரு நாட்டு மக்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையாகவே பார்க்கிறார்கள் என்பதைத்தான் நதீம் மற்றும் சோப்ராவின் தாயார்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.. இந்த அன்பும், நேசமும் இருக்கும் வரை துவேஷமாவது, வெறுப்பாவது.. அவற்றுக்கு முன்பு இவையெல்லாம் தூள் தூள்தான்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்