வாரத்திற்கு 90 மணி நேர வேலை... எல் அண்ட் டி சிஇஓ.,வுக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் சூப்பர் பதில்!

Jan 10, 2025,08:20 PM IST

சென்னை: ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்தில் 90 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற எல் அண்ட் டி நிறுவனர் சுப்பிரமணியன் கருத்து தற்போது பேசு பொருளாகியுள்ளது. அதேசமயம் இந்த கருத்தால் கொதித்த எம் பி சு.வெங்கடேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க முடியவில்லை என்பதை எண்ணி நான் வருந்துகிறேன். அப்படி என்னால் அதை செய்ய முடிந்தால் நிச்சயம் நான் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன். உலகில் முதல் நிலையில் இருக்க வேண்டுமென்றால் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். சாத்தியமான உழைப்பை போட்டால் தான் அசாத்திய விளைவு கிடைக்கும்" என எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமண்யம் ஊழியர்களிடையே கருத்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வாரத்தில் 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்ற எல் அண்ட் டி  நிறுவனத் தலைவரின் கருத்தால் கொதித்து எழுந்த எம்பி இது குறித்து தனது ட்விட்டர்  பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,  "வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல் & டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ளார். தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய  வருடத்தை விட 43 சதவிகித உயர்வு. தான் மேலும் லாபமடைய  தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார். 



அலெக்சாண்டர் தனது கைகளை சவபெட்டிக்கு வெளியே விரித்து வைக்க ஏன் சொன்னார் தெரியுமா? சுப்பிரமணியன்கள் தொடர்ந்து வருவார்கள் என்பதால் தான். தொழிலாளி 8 மணி நேரத்தை சட்ட உரிமை ஆக்கியது ஏன் தெரியுமா? இது போன்ற அபத்தமான போதனைகளை நிரந்தரமாக சவப்பெட்டியில் அறையத்தான்.

நீங்கள் செல்வம் பெருக்க, தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை உங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு பக்கத்தில் கொண்டு வரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது" என பதிவிட்டுள்ளார்.

எல் அண்ட் டி நிறுவன தலைவர் சுப்ரமணியத்தின் பேச்சும், அதற்கு எம்.பி., சு.வெங்கடேசன் அளித்துள்ள காட்டமான பதிலும் தான் தற்போது சோஷியல் மீடியாவில் செம டிரெண்டிங் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. எம்.பி., சு.வெங்கடேசனின் கருத்திற்கு சாமானிய மக்களிடம் இருந்து ஆதரவுகளும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்