சென்னை: நடிகர் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளதாக பட குழு அறிவித்துள்ளது.
ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஷ்ணு விஷால் மற்றும் மஞ்சிமா மோகன் கூட்டணியில் எஃப் ஐ ஆர் படத்தை இயக்கி வெற்றி பெற்றிருந்தது நினைவிருக்கலாம். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மஞ்சு வாரியர்,அனேகா நாயகிகளாக நடித்துள்ளனர். அவர்களுடன் நடிகர் சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஹிந்தி, ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர் கூட்டணியில் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}