சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், நாட்டின் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்கு சிறந்த ரோல் மாடலாக மாறப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை பூந்தமல்லியில் நடந்த சம்பவம் நிரூபித்துள்ளது.
உலகில் உள்ள எல்லாத் தரப்பு மக்களுக்கும் நிறையவே சவுகரியங்கள், வசதிகள் உள்ளன. அவர்களுக்கான சமூகமாகவே நமது சமூகத்தின் பெரும்பான்மை உள்ளது. ஆனால் மாற்றுத் திறனாளிகள் மட்டும் இந்த சமுதாயத்தில் எப்போதும் தனித்து விடப்பட்டு வருகிறார்கள். வீடுகளுக்குள் மட்டுமே அவர்களுக்குத் தேவையான அனைத்தும் எளிதாக கிடைக்கிறது. ஆனால் வெளியில் வருவதானால், வந்து விட்டு மீண்டும் வீடு திரும்பும் வரை அவர்கள் சந்திக்கும் சவால்களைப் பட்டியல் போட்டால் அது அனுமார் வால் போல நீளும்.

அவர்கள் எளிதில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியாது. ரயிலாக இருந்தாலும் சரி, பஸ்ஸாக இருந்தாலும் சரி பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பல பொதுப் போக்குவரத்து நிலையங்களில் அவர்களுக்காக ரேம்ப் வசதி கூட கிடையாது. இப்போதுதான் ஒவ்வொன்றாக வருகிறது.
அந்த வரிசையில் சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு தாழ்தளப் பேருந்துகள் அமல்படுத்தப்பட்டன. அவை மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காகவே உருவாக்கப்பட்டவை. ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக கூறி அவற்றை பின்னர் நிறுத்தி விட்டனர். அதன் பின்னர் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இவற்றை மீண்டும் இயக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. மேலும் புதிய பேருந்துகளும் வாங்கப்பட்டன.
இந்தப் பேருந்துகளுக்கு மாற்றுத் திறனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காரணம், இவற்றில் வீல் சேருடன் பயணிகள் பயணிக்க முடியும், சுலபமாக ஏறி இறங்க முடியும் என்பதால் இந்தப் பேருந்துகள் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளன. இந்த நிலையில் இந்த பேருந்து எந்த அளவுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியாக இருக்கிறது, எம்டிசி கண்டக்டர்கள் எந்த அளவுக்கு அனுசரணையாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணமாக ஒரு சம்பவத்தை எம்டிசி நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளது.
.jpg)
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த அனுசுயா என்ற மாற்றுத்திறனாளி பயணி, மதுரவாயல் பைபாஸ் டூ கூடுவாஞ்சேரி செல்லும் 104 சிஎக்எஸ் தாழ்தளப் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு கண்டக்டர் பாஸ்கர் பஸ்சில் ஏறவும், இறங்கவும் உதவி செய்துள்ளார். அவர் பத்திரமாக பேருந்தில் ஏறங்கவும், அவரது வீல்சேரை பாதுகாப்பான முறையில் பஸ்சுக்குள் நிறுத்திக் கொள்ளவும், பின்னர் அவரது இடத்தில் இறங்கவும் உதவி செய்துள்ளார் பாஸ்கர் என்று எம்டிசி நிர்வாகம் பாராட்டியுள்ளது.
பாராட்டுக்குரியவர் பாஸ்கர் மட்டுமல்ல, இந்த சேவையை சிறப்பாக நடத்துவதை உறுதி செய்யும் எம்டிசி நிர்வாகமும்தான். இதை தொடர்ந்து இதே உணர்வோடும், அக்கறையோடும் எம்டிசி நிர்வாகமும், அதன் ஊழியர்களும் செய்து வர வேண்டும் என்பதே மாற்றுத் திறனாளிகளின் ஒரே கோரிக்கை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}