சென்னை "பீக் ஹவர்" போக்குவரத்து நெரிசல்.. 12 பஸ் ரூட்டுகளில் 20 சர்வீஸ்கள் அதிகரிப்பு..!

Jan 05, 2023,08:31 PM IST


சென்னை:  சென்னையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள 12 பஸ் வழித்தடங்களில் 20 சேவைகளை அதிகரிக்க மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.


சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் பஸ்களில் நிலவும் கடும் நெரிசலால் பாதிப்படைகின்றனர்.


இதையடுத்து கூட்ட நெரிசல் அதிகம் உள்ள முக்கிய வழித்தடங்களில் பஸ் சேவைகளை அதிகரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகர போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து தற்போது கூட்ட நெரிசல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்ட 12 வழித்தடங்களில் 20 சேவைகளை அதிகரிக்க போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.


புதிய பேருந்துகள் இயக்கப்படுவதால் படியில் பயணம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும். மேலும் தானியங்கிக் கதவுகள் உள்ள பேருந்துகளில் படியில் பயணம் செய்ய முடியாது. இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும். புதிய சேவைகள் மூலம் தினசரி காலை 8 மணி  முதல் ஒன்பதரை மணிக்கு இடையிலான நேரத்தில் தற்போது 20,000 மாணவர்கள் என்ற அளவிலிருந்து 22,000 மாணவர்கள் வரை கூடுதலாக பயணம் செய்ய வழி கிடைக்கும்.


பள்ளி மாணவர்களின் நலன் கருதி மாணவர்கள் இலவசமாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்ய சிறப்பு டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.                        


கூடுதல் சேவை அறிமுகப்படுத்தப்படும்  வழித்தடங்கள்:


29A - பெரம்பூர் - எழும்பூர்

M88 - போரூர்- குன்றத்தூர்

M88 - போரூர்- வடபழனி

54R - ராமாபுரம்-குமனன்சாவடி

54R - ராமாபுரம்- டைடல் பார்க்

153 -  கோயம்பேடு-குமனன்சாவடி

147 - தி.நகர்- அம்பத்தூர் தொழில் பூங்கா

56 A - எண்ணூர்- வள்ளலார் நகர்

38 A - மாதவரம்- பிராட்வே

5G - கண்ணகி நகர்- வேளச்சேரி

21 G - கிண்டி- பிராட்வே

21 X - கிண்டி-பிராட்வே (வழி மந்தை வெளி)

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்