"கேரளாவில் படகு விபத்து நிகழும்.. 10 பேருக்கு மேல் இறப்பார்கள்".. முன்பே கணித்த நிபுணர்!

May 09, 2023,05:03 PM IST
மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நடந்த அதிர வைத்த படகு விபத்து குறித்து 2 மாதங்களுக்கு முன்பே சர்வதேச இயற்கைப் பேரிடர் நிர்வாக நிபுணர் முரளி தும்மருக்குடி கணித்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், தனூர் என்ற ஊரில் தூவர் தீரம் ஆற்றில் படகு கவிழ்ந்து 22 பேர் பரிதாபமாக பலியானார்கள். இதுதொடர்பாக படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த படகு விபத்து  2 மாதங்களுக்கு முன்பே முரளி தும்மருக்குடி  கணித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக ஏப்ரல் 1ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார் முரளி. பலரும் அதை ஏப்ரல் ஃபூல் போஸ்ட் என்றே நினைத்திருந்தனர். ஆனால் அந்தக் கணிப்பு தற்போது நிஜமாகியுள்ளது. அந்த பதிவில், விரைவில் கேரளாவில் ஒரு படகு விபத்து நிகழும். அதில் 10க்கும் மேற்பட்டோர் பலியாவார்கள். இதை நான் ஜோதிடரீதியாக சொல்லவில்லை. நடக்கும், ஏற்கனவே நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் சொல்கிறேன். கண்டிப்பாக இது நடக்கும். 



எத்தனையோ படகு விபத்துகள் நடந்து விட்டன. எத்தனையோ பேர் இறந்து விட்டனர். ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாம் அக்கறை காட்டுவதில்லை. கவனிப்பதில்லை, கண்காணிப்பதில்லை. எல்லாம் நடந்து முடிந்த பின்னர்தான் அதைப் பற்றி பேசுகிறோம். குறிப்பாக டிவி விவாதங்கள் அனல் பறக்கும்.

கேரளவில் ஹவுஸ் போட் என்பது ஒரு சுற்றுலாவாகும். கோழிக்கோடு முதல் கொல்லம் வரை ஏராளமான ஹவுஸ் போட்டுகள் உள்ளன. எத்தனை போட்டுகள் உள்ளன என்று யாருக்காவது தெரியுமா.. தெரியாது.  உபேர், ஓலா போன்று புக்கிங் ஏன் ஹவுஸ் போட்டுகளுக்கு இல்லை. அதில் பயணிப்போர், தங்குவோருக்கு எண்ணிக்கை கட்டுப்பாடு ஏன் இல்லை.

முன்பெல்லாம் சென்னைக்குப் போனோம் என்றால் ரயில் நிலையத்திலேயே லாட்ஜுகளின் பிரதிநிதி நின்று தங்களது லாட்ஜுக்கு வருமாறு கூவிக் கூவி அழைப்பார்கள்.  ஆனால் இன்று அப்படி இல்லை. ஆப்புகள் வந்து விட்டன. யாரும் நம்மைத் தேடி வருவதில்லை. ஆனால் ஆலப்புழாவில் என்ன நிலைமை.. படகுகளுக்கு ஆள் பிடிக்க அலை மோதும் ஏஜென்டுகளைப் பார்க்கலாம். ஏன் போட்டுகளுக்கும் புக் செய்ய ஆப் இல்லை.?

படகுகள் அழகானவைதான். அருமையான அனுபவம்தான். ஆனால் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக உள்ளது. அதைப் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. பயணிகளும் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. விமானத்தில், போனால் கப்பலில் போனால் மட்டும் நாம் பாதுகாப்பு குறித்து அக்கறை காட்டுகிறோம். ஆனால் ஹவுஸ் போட்டுக்கு அது இல்லை.

எதை எதையோ விவாதிக்கும் மீடியாக்களும் இதைக் கண்டு கொள்வதில்லை. ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகுதான் குய்யோ முறையோ என்று கூவுகிறார்கள். இப்போதும் அசம்பாவிதம் நடக்கும்.. மீடியா என்ன செய்யப் போகிறதோ.. ஆனால் என்னை தயவு செய்து டிபேட்டுகளுக்கு அழைத்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார் முரளி.

முரளி சொல்வது உண்மைதான்.. ஆலப்புழாவுக்குள் நுழைந்து விட்டாலே ஹவுஸ் போட்டுகளின் ஏஜென்டுகள் தொல்லை தாங்க முடியாது. அவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்கிள் போட் ஓனர்களின் பிரதிநிதிகளாகவே இருப்பார்கள்.  படகின் பாதுகாப்பு குறித்து யாருக்குமே தெரியாது. பணமே அவர்களின் குறியாக இருக்கிறது. இப்படிப்பட்ட அவல நிலையைத்தான் முரளி தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் சொன்ன அசம்பாவிதம் நடந்து விட்டது என்பது சோகமானது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்