முருங்கைக்காய் போலவே.. முருங்கைப் பூவில் சூப்பர் குணம் இருக்கு.. பல பிரச்சினைகளுக்குத் தீர்வு

Aug 19, 2025,10:51 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


முருங்கைப்பூ அதாவது Moringa flower என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் முருங்கைப்பூவில் பல மருத்துவ குணங்கள் இருக்கின்றது. இது மனசோர்வு,நரம்பு தளர்ச்சி, வாத நோய் போன்றவற்றை குணப்படுத்துகிறது, பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் அதிகம் உள்ளது ,சளி மற்றும் தொண்டைத் தொற்றுக்கு நல்லது .மேலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வீட்டில் ஒரு முருங்கை மரம் இருந்தாலே போதும். முருங்கை மரத்தின் இலை , பூ , காய் என அனைத்தும் உணவாக சமைப்பதற்கு ஏற்ற ஒரு அருமையான சத்துக்கள் நிறைந்தது. 


முருங்கைப்பூ காய்கறி மார்க்கெட் களில் , பழமுதிர் நிலையங்களில் மற்றும் அனைத்து இடங்களில் கிடைக்கின்றது. கிடைத்தால் விட்டு விடாதீர்கள்... அதனை வாங்கி சமைத்து உணவில் சேர்த்துக் கொள்வது சிறப்பு. முருகை பூவில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முருங்கைப் பூவை நெய்யில் லேசாக வறுத்து  பச்சரிசி சாதத்தில் கலந்து சாப்பிட நரம்பு தளர்ச்சி குணமாகும்.




முருங்கை மரம் என்றாலே அதனுடைய காய்களும் , கீரைகளும் மட்டுமே நம் அனைவர் நினைவுக்கு வரும் .அதில் அதிக மருத்துவ குணங்கள் இருப்பதனால் முருங்கைக்காய் சாம்பார், பொரியல், முருங்கைக் கீரை பொரியல் என்ன விதவிதமாக சமைத்து ருசிப்போம் .அதை விட முருங்கை பூவில் இத்தனை சத்துக்கள் இருப்பதை தெரிந்தாலே இனி இந்த முருங்கை பூவை விட மாட்டீர்கள்...


முருங்கை மரத்தில் வெள்ளையாக பூத்துக் குலுங்கும் முருங்கைப் பூக்களை பார்க்க மிகவும் அழகாக இருக்கும் .இது உடல் வலிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும் முருங்கை பூவில் ஆரோக்கியமான தாதுவான வைட்டமின் ஏ உள்ளது. மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இன்றைய காலங்களில்    ஆண்களும், பெண்களும், படிக்கும் குழந்தைகளும் வேலைப்பளு காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கின்றனர் .எனவே, அவர்கள் உணவில் முருங்கை ப்பூவை சேர்த்துக் கொண்டால் உடல் சோர்வு மற்றும் மனசோர்வு இரண்டும் காணாமல் போகும்.


முருங்கை பூவை எவ்வாறு பயன்படுத்தலாம்... 


* முருங்கை பூ தேநீர் ஆரோக்கியத்திற்கு நல்லது .பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி மற்றும் தலை வலி  ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு முருங்கைப் பூவை கொதிக்க வைத்து தேநீர் போல தயாரித்து பருகலாம்.


*முருங்கை  பூக்களை சுத்தப்படுத்தி வெயில் நன்கு காய வைத்து பொடி செய்து அதனை தண்ணீரில் கலந்து கொதிக்க விட்டு குடித்து வர தூக்கமின்மை நரம்பு நோய்கள் நீங்கி உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.


* தொலைக்காட்சி மற்றும் கணினி மற்றும் கைபேசிமுன் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது கண்களுக்கு பெரும் தீங்கிழைக்கிறது. இதிலிருந்து நிவாரணம் பெற முருங்கைப் பூக்களை பசும் பாலில் கலந்து நன்கு காய்ச்சி சாப்பிடுவது மிகவும் நல்லது.


* முருங்கை பூவை கீரையுடன் சேர்த்து வெங்காயம், மிளகாய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட கண் குறைபாடுகள் குணப்படும்.


* சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் முருங்கைப் பூவை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


பயன்பாடுகள்:


* முருங்கைப்பூ சூப் செய்து சாப்பிடலாம். முட்டையுடன் சேர்த்து பொரியல் மற்றும் முருகப்பூ புளிக்குழம்பு செய்து சாப்பிடலாம். முருங்கைக்காய் பொரியல் செய்யும் பொழுது அதனுடன் பூ சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.


* முருங்கைப் பூவை உணவில் சேர்த்துக் கொள்வதனால் பெண்களின் உடல் வலுப்பெறுவதோடு பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் பெருகும். எந்த உணவாகினும் எதையும் அளவோடு சாப்பிடுவது நல்லது.


இதுபோன்ற மேலும் பல நல்ல கட்டுரைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!

news

சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி

news

மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!

news

தொடர்ந்து 10வது நாளாக குறைந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.320 குறைவு!

news

Weight loss tips: எந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும்?

news

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி காலமானார்

news

முருங்கைக்காய் போலவே.. முருங்கைப் பூவில் சூப்பர் குணம் இருக்கு.. பல பிரச்சினைகளுக்குத் தீர்வு

news

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதி.. இந்தியா கூட்டணியின் போட்டி சம்பிரதாயமாகவே இருக்கும்!

news

Sri Krishna.. தீராத விளையாட்டுப் பிள்ளை!

அதிகம் பார்க்கும் செய்திகள்