Singer Suchitra: பாவம்னு வாய்ப்பு கொடுத்தா.. மன உளைச்சல் தந்துட்டாங்க.. இசையமைப்பாளர் புலம்பல்!

Nov 29, 2024,12:44 PM IST

சென்னை: டைட்டானிக் சன்னி சன்னி என்ற இசை ஆல்பத்தில் பாடிய சுசித்ரா, பாடல் பிரமோஷனில் தனது பெயரை எவ்விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என பேசியது என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டது என இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா மனம் வருந்தி பேசியுள்ளார்.


தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகிகளில் முக்கியமானவராக வலம் வந்தவர் சுசித்ரா. இவர் பல்வேறு ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அதே சமயத்தில்  தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு டப்பிங் பேசி இருக்கிறார். நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமாரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.




இந்த நிலையில் திடீரென சுசித்ரா லீக்ஸ் என்ற பெயரில் அவர் திரையுலகினர் குறித்து புகார்களைக் கூற ஆரம்பித்து அதிர்ச்சி அளித்தார். அவரது புகார்களால் திரையுலகமே கலங்கிப் போனது. கார்த்திக்கும், இவரும் பின்னர் விவாகரத்தும் செய்து கொண்டனர். விடாமல் வெளுத்தெடுத்து வந்த சுசித்ரா தொடர்ந்து இதை மேற்கொண்டு வருகிறார்.  வைரமுத்து தொடங்கி தனுஷ் வரைக்கும் பல்வேறு திரைப் பிரபலங்களும் மீது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பும் வகையில் அவதூறு கருத்துக்களை பரப்பினார். அதேபோல் கே. பாலச்சந்தரையும் கடுமையாக விமர்சித்தார் சுசித்ரா. 


இதனால் திரையுலகினர் சுசித்ராவை ஒதுக்கி விட்டனர். பாடும் வாய்ப்பு தருவதில்லை. இந்த நிலையில் இப்படி பல்வேறு சர்ச்சை பேச்சுகளில் சிக்கிய பாடகி சுமித்ரா மீது இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். 




அதாவது நடிகர் கரண் நடித்த கந்தா என்ற படத்திற்கு இசையமைத்த சக்தி ஆர் செல்வா சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து விட்டு தற்போது மீண்டும் சினிமாவில் பணியாற்ற வந்துள்ளார். தானே எழுதி, இயக்கி, இசையமைத்த  டைட்டானிக் சன்னி சன்னி என்ற இசை ஆல்பத்தை பாடகி சுசித்ராவுடன் பாடியுள்ளார். பாடலை பாடி முடித்த பிறகு பாடகி சுசித்ரா பாடலின் பிரமோஷனில் தனது பெயரை எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது. தனக்கு பெண்கள் இடையே மிகப்பெரிய நல்ல பெயர் இருக்கிறது. அந்தப் பெயரை நீங்கள் அறுவடை செய்யக்கூடாது என தீர்மானமாக சொல்லிவிட்டாராம். 


இதனால் அதிர்ச்சியாகியுள்ளார் சக்தி செல்வா. இதுகுறித்து அவர் கூறியதாவது: கவிஞர் வைரமுத்து, இயக்குனர் கே.பாலச்சந்தர், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா என பல பிரபலங்களை சம்பந்தமே இல்லாமல், அவதூறாக பேசும் பாடகி சுசித்ரா, தான் பாடிய பாடலைப் பற்றி பேச மாட்டேன் என்கிறார்.




கடந்த இரண்டு வருடங்களாக சுசித்ராவிற்கு சரியான வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் நான் அவர் குரலின் மீது வைத்திருந்த நம்பிக்கையில், அவரை பாட வைத்தேன். ஆனால் அவர் தனது புகழை, நான் அறுவடை செய்யக்கூடாது என தீர்மானமாக சொல்லிவிட்டார்.


பாடகி சுசித்ரா சில நேரங்களில் அம்பியாகவும், திடீரென அந்நியனாகவும் மாறுகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார் சக்தி செல்வா.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!

news

தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை

news

வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்

news

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து

news

நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்

news

துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்

news

வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்

news

பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்

news

Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்