சென்னை: பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12 வது மாதமான துல்ஹஜ் 10 நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை இஸ்லாமியர்கள் ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கின்றனர். இந்த ஹஜ் பெருநாளில் இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின்னர் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலி கொடுப்பது வழக்கம். இதன் பின்னர் இந்த இறைச்சிகளை மூன்று பங்காக பிரித்து இல்லாத ஏழை எளியவர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தானமாக வழங்குவர்.

இறைவன் கட்டளைக்காக, மகனை பலியிடத் துணிந்த இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக
பக்ரீத் பண்டிகை துல்ஹஜ் பத்தாவது நாளான இன்று இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். இதனை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவிக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரபு நாடுகளில் ஜூன் 15 முதல் 18 வரை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}