பெண்ணே உன்னால் முடியும்!

Mar 08, 2026,04:04 PM IST
- க.யாஸ்மின் சிராஜூதீன்

பெண்ணின்றி பாரில்லை 
பாசத்திற்கு  விலையில்லை
வீரத்திற்கு குறைவில்லை...

இயற்கை அன்னை ...
பூமித்தாய் ..

வான் மகள் ... 
வெண்ணிலவு...

அளப்பரிய பெருமை பெண்ணிற்கே 
வையம் தந்து வாழ்த்து கோடி சொல்லி  கிரீடம் சூட்டுதே....

சொல்லில் சொல்லி அடக்கிவிட முடியாது ...

அன்றும் இன்றும் என்றுமே 
தன்னிகரில்லா பெருமையின் சின்னமே ...



நாட்டின் கண்களே...
வீட்டின் ஒளிவிளக்குகளே....
தீப ஒளியாய் ஒளிவீசிடுங்கள் ...

வீட்டையும் நாட்டையும் காக்கும் கரங்களே....
எங்கள் பூமித்தாயின் 
செல்ல மலர்களே..

பெண்கள் நாட்டின் கண்கள் 
வீட்டின் ஒளி விளக்குகள்...

பெண்ணின்றி அமையாது உலகு
அவளின்றி மகிழாது வீடு....

பெண்கள் தடம் பதியாத துறைகள் இல்லை....
பெண்ணடிமை வீடுகள் சிறப்புறுவதும் இல்லை....

எத்தனை எத்தனை பதவிகள் பெண்ணிற்கு ....  
அம்மா, அக்கா, தங்கை,மகள்,
மனைவி, தோழி , பாட்டி ......
அடுக்கிக் கொண்டே செல்லலாம்....

மாணவர்களுக்கு ஆசிரியராகவும் 
அம்மாவாகவும்....
அன்பின் உருவமாகவும் திகழ்பவள்....

மாற்றம்  ஒன்றே மாறாதது மனபலம் ஒன்றே  சாதிப்பது...
பெண் காணாத போராட்டம் இல்லை 
வெற்றி பெறாமல் விட்டதுமில்லை...

சொல்லில் அடக்கிவிடமுடியாது 
பெண்களின் பெருமையையும்,தியாகத்தையும்...

பெண்னை யார் என்று நினைத்தீர்  ..... 

வளைபோட்ட கைகள் சமையல் மட்டும்... 
செய்யும் என்று  நினைத்தீரோ 

பார்போற்ற..... 
எட்டுத்திக்கும்  புகழ்பரவ
வான்வெளியில் ஆராய்ச்சி.. 

அனைத்து துறைகளிலும் பெண்களின்  கைவண்ணம்.... 

மெல்லிய மலர் போல் மென்மையவள் ... 

என்ற வர்ணனைக்கு 
அடங்கிவிடுவாளா அவள்... 

மென்மைக்குள் மேரு போன்ற
உயர்பண்புடையவள்.... 

வீட்டிற்கும் நாட்டிற்கும் அவளே உயிர்நாடி.... 

பாசமும் நேசமும் பணிவும்
பேரன்பும் ... 

பொறுமையும்  துணிவும்  கொண்ட வீரமங்கையவள் .... 

பெண்ணே உன்னால் முடியும்
சாதனைப்படைத்திடு ... 

(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்