சென்னை: சுயநலமற்ற சேவை புரியும் செவிலியர்களின் சாபம் அறிவால அரசை இனி அரியணை ஏறவிடாது. செவிலியப் பெண்களைப் பசி, பட்டினியுடன் அடிப்படை வசதிகளின்றி ஒரு மண்டபத்தில் அடைத்து வைப்பது தான் திமுக அரசின் வெல்லும் தமிழ்ப் பெண்களுக்கான இலக்கணமா? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளின்படி சமவேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறவழியில் போராடி வரும் செவிலியர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவது, ஊரப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைப்பது என அலைக்கழிக்கும் அறிவாலய அரசின் அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அருவருப்புடன் சிலர் விலகிச் செல்லும் நோயாளிகளையும் மனிதநேயத்துடன் முகம் சுழிக்காது தாயுள்ளத்துடன் பேணி வரும் செவிலியர்களை, ஏதோ கொலைக் குற்றவாளிகளைப் போல அடக்கி ஒடுக்க முயற்சிப்பது தான் திராவிட மாடலா? நூற்றுக்கணக்கான செவிலியப் பெண்களைப் பசி, பட்டினியுடன் அடிப்படை வசதிகளின்றி ஒரு மண்டபத்தில் அடைத்து வைப்பது தான் திமுக அரசின் 'வெல்லும் தமிழ்ப் பெண்களுக்கான' இலக்கணமா? ஆட்சியே முடியப்போகிறது, ஆனால் திமுக கொடுத்த வாக்குறுதிகளை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை என எந்தப் பிரிவினர் கேட்டாலும் அவர்களின் குரல்வளையை நெரிப்பது என்ன விதமான பாசிச மனநிலை?
குறிப்பாக, பேச்சு வார்த்தைக்காக வரவழைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தங்களை மிரட்டும் தொனியில் பேசியதாக செவிலியர் சங்க நிர்வாகிகள் தெரிவிப்பது திமுக தலைவர்களுக்கு ஆணவம் தலைக்கேறிவிட்டது என்பதைத் தான் நமக்கு உணர்த்துகிறது. ஐந்தறிவு கொண்ட அணிலுக்கெல்லாம் பாவம் பார்க்கும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு, உழைக்கும் வர்க்கத்தினர் மீது கொஞ்சம் கூட இரக்கமில்லை என்பது விசித்திரமாக உள்ளது. தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்களை ஏமாற்றி ஆட்சி அமைத்தவுடன் அதே மக்களின் மீது அடக்குமுறையை ஏவும் திமுக எனும் ஏமாற்றுக்கார கட்சிக்கு மீண்டும் அரியணை என்பது இனி கனவிலும் கிட்டாது! என்று தெரிவித்துள்ளார்.
தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்
தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை
ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு
ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்
சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்
பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி
Beautiful things don't ask for attention
{{comments.comment}}