சென்னை: நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியதற்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியார் திடலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்.பி ஆ.ராசா பேசுகையில், சாதனைகளுக்காக மட்டுமே ஒரு அரசு 50 ஆண்டுகள் நீடிக்கும் என சொல்ல முடியாது. இந்திரா காந்தி மறைந்தபோது ஆட்சி மாறியது. எம்ஜிஆர் மருத்துவமனைக்கு சென்றபோது ஆட்சி மாறியது. 2ஜி ஊழல் 1.76 லட்சம் கோடி எனச் சொன்னபோது ஆட்சி மாறியது. எதிரிகள் வெவ்வேறு வடிவில் வருவார்கள். மத்திய அமைச்சர் அமித்ஷா அண்மையில் மதுரைக்கு வந்தார். அங்கு பேசிய அமித்ஷா, டெல்லியைப் பிடித்துவிட்டோம்; ஹரியானாவைப் பிடித்துவிட்டோம்; மகாராஷ்டிராவை பிடித்துவிட்டோம்; அடுத்து தமிழ்நாடுதான் என்கிறார். முட்டாள்.. முட்டாள்.. டெல்லியில் நீங்கள் பார்த்த அரவிந்த் கெஜ்ரிவால் என்பவர் ஒரு தனிப்பட்ட தலைவர். ஒரு அரசியல் கட்சி அவ்வளவுதான். ஹரியானாவில் தோற்கடித்தது ஒரு தனி மனிதனை. மகாராஷ்டிராவில் தோற்கடித்தது ஒரு தனி மனிதனை. ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தனி மனிதன் அல்ல.. அவருக்குப் பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்கிற திராவிட தத்துவம் இருக்கிறது. அந்த தத்துவத்தை வீழ்த்துவதற்குதான் துடிக்கிறீர்கள் என்று பேசியிருந்தார்.
இந்த பேச்சு பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆர்.ராசாவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

கண்களுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்து, அம்பலப்பட்டு, சிறை சென்றுவந்த திமுக எம்பி திரு. ஆ. ராசா அவர்கள், நாட்டிற்காக நேர்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் நமது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைத் தரக்குறைவாக விமர்சித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை, ஆ. ராசா அவர்களே! உங்கள் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்கள் போல கைத்தட்டல்களுக்காக எதையாவது உளறுவது ஆபத்தானது.
கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகளின் புகலிடமாகத் தமிழகம் மாறியதற்கு முழு முதற்காரணம் உங்கள் திராவிட மாடல் அரசு, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனைக் கட்சிப் பொறுப்பில் வைத்துத் தாலாட்டிக் கொண்டிருந்த அரசு உங்கள் விடியா அரசு, தமிழகத்தில் ஆயுதக் கலாச்சாரம் வேரூன்றி வளர்வதை வேடிக்கை பார்க்கும் அரசு உங்கள் விளம்பர மாடல் அரசு, கர்ப்பிணிப் பெண்ணைக் காவல் நிலையத்திலேயே வைத்துக் கொடூரத் தாக்குதல் நடத்திய அரசு உங்கள் கொடுங்கோல் அரசு. இப்படி பொதுமக்களின் பாதுகாப்பை முழுவதுமாக அடகுவைத்த நீங்கள், இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டின் பாதுகாப்பை மொத்தமாகக் கட்டிக் காக்கும் நமது மத்திய உள்துறை அமைச்சரைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?
அதுசரி, திமுக ஆட்சியில் தமிழகத்தின் அவல நிலை குறித்து எதுவும் தெரியாமல், நாம் தான் நம்பர் 1 முதல்வர் என்ற மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒருவரை தலைவராகக் கொண்ட மூடர் கூட்டத்திற்கு அனைவரும் முட்டாளாகத் தான் தெரிவார்கள், மஞ்சள் காமாலைக்காரர் கண்களுக்கு அத்தனையும் மஞ்சளாகத் தெரிவது போல. உங்கள் கீழ்த்தரமான ஆணவமிக்க அரசியல் நாகரிகமற்ற பேச்சுக்களுக்கு, தமிழக மக்கள் உங்களை 2026க்குப் பிறகு அரசியலை விட்டே துரத்திவிடுவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
ஐங்கரன் (நெடுங்கதை)
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
{{comments.comment}}