ரூ.5000 தேர்தல் தோல்வி அச்சத்தில் கொடுக்கப்பட்ட அச்சாரத் தொகையே: நயினார் நாகேந்திரன்!

Feb 13, 2026,04:51 PM IST

சென்னை: பொங்கலுக்கான ரூ.3,000-மும், கோடைகாலத் தொகை ரூ.2,000-மும் மக்கள் நலனுக்காகக் கொடுக்கப்பட்ட தொகை அல்ல, தேர்தல் தோல்வி அச்சத்தில் கொடுக்கப்பட்ட அச்சாரத் தொகையே என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், மோசடி திமுகவின் வலையில் தமிழக மகளிர் சிக்க மாட்டார்கள்!


2021-இல் ஆட்சி அரியணை ஏறியதிலிருந்து 2024 பாராளுமன்றத் தேர்தல் வரை 28 மாதங்கள் மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் ஏமாற்றிய திமுக அரசு, வலையை விரித்து இரையைப் பிடிப்பது போல, இப்பொழுது ரூ.5,000 பணத்தைக் கொடுத்து, தங்கள் அவல ஆட்சியின் சுவடுகளை மறைத்துவிடலாம் எனத் தப்புக்கணக்கு போடுகின்றது.




ஆட்சி தொடங்கியதிலிருந்து பொங்கலும் கோடை காலமும் எத்தனையோ முறை வந்திருக்கிறது. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் தான் பொங்கலும், கோடை காலமும் திமுகவின் கண்களுக்குத் தெரியுமா? உண்மையில் பொங்கலுக்கான ரூ.3,000-மும், கோடைகாலத் தொகை ரூ.2,000-மும் மக்கள் நலனுக்காகக் கொடுக்கப்பட்ட தொகை அல்ல, தேர்தல் தோல்வி அச்சத்தில் கொடுக்கப்பட்ட அச்சாரத் தொகையே!


2021-இல் இருந்து 2023 வரையிலான ₹28,000 மகளிர் உரிமைத் தொகையை வழங்காமல் ஏமாற்றிவிட்டு, 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சிலருக்கு மட்டும் உரிமைத் தொகையை வழங்கிய திமுக, ஒருவேளை, தப்பித்தவறி துரதிஷ்டவசமாக 2026 தேர்தலில் வென்றால், உடனே 2026-இல் மகளிர் உரிமைத் தொகையை வழங்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?


சொல்லப் போனால், திமுகவின் திட்டமே, தற்போது ரூ.5,000 வழங்கி அதையும் இதையும் செய்து குட்டிக்கரணம் அடித்து சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்துவிட்டால், முன்பு செய்தது போல, 3 ஆண்டுகள் வரை உரிமைத் தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டு, 2029 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கியதும் மீண்டும் பணத்தைக் கொடுத்து, மக்களை ஏமாற்றலாம் என்பது தான்!


இந்த மோசடி திட்டத்தை நம்புவதற்குத் தமிழக மகளிர் முட்டாள்கள் அல்ல. அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மகளிர் உரிமைத் தொகையாக ₹2,000 வழங்கப்படும் என்று அறிவித்ததை ஈயடித்தான் காப்பி அடித்து, சுய கண்டுபிடிப்பு போல பெருமை பேசும் திமுகவின் வலையில் சிக்கமாட்டார்கள்! தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தால், உறுதியாகத் தொடர்ந்து உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதை மகளிர் நன்கு அறிவர்! ரூ.25,000 வழங்காமல் ஏமாற்றிய அறிவாலயத்திற்கு, வரும் தேர்தலில் ஏமாற்றத்தையே பரிசளிப்பர் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்