சென்னை: டீசல் மீதான கலால் வரியை மொத்தமாக நீக்கியதோடு, பெட்ரோல் மீதான கலால் வரியை ₹10 குறைத்திருக்கும் இந்த சீரிய நடவடிக்கையால், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விலை உயரும் அபாயத்திலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், மத்திய கிழக்கு நாடுகளின் போரால் முன்னேறிய நாடுகளே 30% வரை பெட்ரோல் விலையை உயர்த்திய நிலையில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு இன்று வரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, தற்போது அவற்றின் மீதான கலால் வரியையும் குறைத்து விலை உயர்வைத் தடுத்திருப்பது மிகுந்த வரவேற்பிற்குரியது.
டீசல் மீதான கலால் வரியை மொத்தமாக நீக்கியதோடு, ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான கலால் வரியை ₹10 குறைத்திருக்கும் இந்த சீரிய நடவடிக்கையால், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விலை உயரும் அபாயத்திலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

வரி குறைப்பினால் அரசுக்கு வருவாய் இழப்பு நேரிடும் ஆபத்திருந்தும், பாரத மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்தி, மக்களை விலை உயர்விலிருந்து காக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வரும் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஒரு சிறந்த தலைமைக்கான எடுத்துக்காட்டு என்பதில் எந்த சந்தேகமுமில்லை! என்று தெரிவித்துள்ளார்.
தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்
தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை
ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு
ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்
சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்
பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி
Beautiful things don't ask for attention
{{comments.comment}}