- தெ.நாராயண லெட்சுமி, B.E
இன்றைய நாள் சாதாரணமா போயிடக் கூடாது என்று நினைக்கிறவர்களுக்கு, ஒரு சில நல்ல விஷயங்களை சொல்றேன் அதை மனசுல வைச்சுக்கலாம். .
நம்ம வாழ்க்கை சின்ன சின்ன நல்ல விஷயங்களால்தான் அழகாகிறது. அந்த மாதிரி நல்ல விஷயங்களை நினைச்சு, நன்றியோட நாள் தொடங்கினா மனசுக்கு ஒரு பாசிட்டிவ் ஃபீலிங் வரும்.
காலை எழுந்த உடனே போன் பார்த்து டென்ஷன் எடுக்கிறதுக்கு பதிலா, இரண்டு நிமிஷம் அமைதியா உக்காந்து இன்று என்ன பண்ணலாம் என்று திட்டமிடுங்க. நாள் நல்லா போகும். காலை எழுந்த உடனே அவசரம்னு ஓட ஆரம்பிச்சிடுறோம். ஆனால் இரண்டு நிமிஷம் அமைதியா மூச்சை கவனிச்சு உட்கார்ந்தாலே மனசு ஸ்டேபிளா ஆகிடும்.

வீட்டுல இருக்கிற பெரியவர்கள் முகம் பார்த்து பேசுறதும் ஒரு நல்ல சகுனம் மாதிரி தான். "சாப்பிட்டீங்களா?”ன்னு கேளுங்கள்.அந்த ஒரு வார்த்தை கூட ஒரு பாசத்தை உருவாக்கும்.
வேலைக்கு போறவர்களுக்கும், வீட்டுல இருக்கிறவர்களுக்கும் ஒரு பொதுவான விஷயம் — பொறுப்பு.
அதிலிருந்து ஓய்வு கிடைக்காது. ஆனா அதுக்குள்ள நமக்கு பிடிச்ச விஷயத்துக்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கிட்டோம்னா மனசு லைட்டா இருக்கும். ஒரு கப் டீ அமைதியா குடிப்பது கூட ஒரு சிறிய சந்தோஷம் தான்.
இன்று யாரு கிட்டயாது பேசணும் என்று நினைத்தால் உடனே பேசிடுங்கள. தயக்கமில்லாம பேசிடுங்க. சில சமயம் ஒரு சின்ன உரையாடல் கூட மனசை லைட்டா மாற்றிடும். சில misunderstandings நீங்கும்.. மனசுக்குள் வைச்சு கொண்டு இருப்பதை விட, சொல்லிட்டு லைட்டா இருந்தா தான் மன அமைதி கிடைக்கும். வாழ்க்கை ரொம்ப சீக்கிரம் போயிடுது, அதனால் பாசத்தை வெளிப்படுத்த தயங்க வேண்டிய அவசியமே இல்லை.
உடம்பை கவனிப்பதும் இன்றைய முக்கிய சிறப்பு. நேரத்துக்கு சாப்பாடு, நிறைய தண்ணீர், கொஞ்சம் நடப்பு — இதெல்லாம் simple விஷயம்னு தோணும். ஆனா தொடர்ந்து பண்ணினா பெரிய மாற்றம் தெரியும். உடம்பு நன்றாக இருந்தா தான் மனசும் சந்தோஷமா இருக்கும்.
இன்று ஒரு நல்ல பழக்கத்தை ஆரம்பிக்கலாம். அது பெரிய விஷயம் இருக்க வேண்டியதில்லை. தினமும் பத்து நிமிஷம் வாசிப்பு, ஐந்து நிமிஷம் பிரார்த்தனை, அல்லது குடும்பத்தோட சேர்ந்து சாப்பிடுவது — இப்படி எதுவாக இருந்தாலும் போதும். தொடர்ச்சிதான் முக்கியம்.
இன்றைய நாள் இன்னொரு நினைவூட்டல் — ஒவ்வொருத்தருக்கும் அவரவர் போராட்டம் இருக்கு. அதனால் யாரிடமும் கோபம் காட்டுவதற்கு முன், கொஞ்சம் புரிதல் வைச்சு நடந்து கொண்டால் உறவுகள் நீடிக்கும். நல்ல வார்த்தை பேசுறது செலவு இல்லாத முதலீடு.
மாலை நேரம் வந்ததும், நாள் முழுக்க என்ன பண்ணோம் என்று ஒரு நிமிஷம் நினைச்சு பாருங்க. நல்ல விஷயங்கள் அதிகமா தெரியும். நம்மால் முடிந்த அளவுக்கு இன்று யாராவது ஒருத்தருக்கு உதவி செய்திருந்தோம் என்ற உணர்வு இருந்தா அதுவே பெரிய சாதனை.
இன்றைய சிறப்பு என்னன்னா — வாழ்க்கையில் நமக்கு நிறைய அனுபவம் கிடைத்து கொண்டே இருக்கிறது. இன்னொரு நாள், இன்னொரு வாய்ப்பு. பெரிதாக வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை. மனநிம்மதியோட நாள் முடிந்தால் அதுவே உண்மையான வெற்றி.
நாளை எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனா இன்று நல்லா இருக்க முடியும் — அது நம்ம கையில்தான் உள்ளது
நம்ம நாளை நாமே அழகாக்குறதுதான் இன்றைய மிகப்பெரிய சிறப்பான செயல். ..
மனநிம்மதி தான் இன்றைய உண்மையான வெற்றி.. இன்று நல்லா வாழ இது ஒரு நினைவூட்டல் அனைவருக்கும்!
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}