- டாக்டர் கோ. லதா
பாடல் :ஒன்று
அண்ணன் தம்பி உறவு
அன்பைச் சொறியும் அருமை உடன்பிறப்பே
துன்பம் துடைக்கும் துணைவனே- என்றும்
இன்பம் பயக்கும் இனிய உறவிதுவே
நன்கே நவிழுவோம் இன்று.
--
பாடல்: இரண்டு
அக்கா தங்கை பாசம்..
அன்னை நிகர்த்த அருமை அக்காவும்
பின்னைப் பிறந்ததோர் தங்கையுமே- நன்னெறியில்
வாழ வழிசெய்யும் வற்றாப் பெரும்பாசம்
ஆழி நிலமிதில் உண்டு.
--

பாடல்: மூன்று
ரத்த பந்தத்தின் மேன்மை...
ரத்தத்தின் பந்தம் இதயத்தின் சொந்தம்
ஒருத்தர்க்கு ஒருத்தர் துணையே- கருத்தோடு
தோள்கொடுத்து நிற்கும் துணிவு மிகுந்திட்
நாளும் நலம்வாழும் காண்.
--
பாடல்: நான்கு.
விளையாட்டு நினைவுகள்...
முற்றத்தில் ஆடி முடிவில்லாச் சண்டையிட்டு
பற்றிப் பகர்ந்திட்ட உணவுகளும்- கற்றுக்
கொடுத்திட்ட பாடம் குவலயத்தில் என்றும்
விடுத்திடா இன்ப நினைவு.
--
பாடல்: ஐந்து.
ஒற்றுமையின் பலம்
வேற்றுமை இன்றி விருப்பமுடன் வாழ்ந்திடின்
ஆற்றல் பெருகும் அறிந்திடுக போற்றுவோம்
உடன்பிறப் புக்குள்ளே உற்ற துணை நிற்க
வெற்றி விளைந்திடும் இன்று.
--
பாடல்: 6.
தின வாழ்த்து.
தேசிய நன்நாள் தினம் இதுவே
போற்றுவோம் பாசஉடன் பிறப்பைக் கொண்டாடி - நேசமுடன்
வாழ்த்தி மகிழ்வோம் மையமே சீர்பெற
ஏற்றுவோம் அன்பின் ஒளி
( இனிய தேசிய உடன்பிறப்புகள் தின வாழ்த்துக்கள்... )
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
{{comments.comment}}