- தி. மீரா
ஒரே வீட்டின் சுவாசத்தில் பிறந்த நெஞ்சங்கள் நாம்,
ஒன்றே சிரிப்பில் ஒலிக்கும் இனிய இசை நாம்.
சண்டை போட்டாலும் சிதையாத பாசம் அது,
சில நொடியில் உருகி சேர்க்கும் நேசம் இது.
கண்ணீரில் கூட கையை பிடிக்கும் நிழல்
கனவுகள் எல்லாம் நனவாகும் பலம்
வாழ்க்கை பாதையில் வழி காட்டும்
விழுந்தாலும் எழுப்பும் உறுதி தரும்
உடன் பிறந்த பாசம் அளவில்லா செல்வம்,
உயிர் இருக்கும் வரை அழியாத உறவு

ஒன்றாக விளையாடினோம்
ஒன்றாக சாப்பிட்டோம்
நன்றாகப் பேசி சிரித்தோம் தினமும்
பண்டிகை நாட்களில் பலகாரம் பகிர்ந்தோம்
வண்டியில் ஏறி ஊரை வட்டம் அடித்தோம்
எண்ணங்கள் ஒன்றாக
எப்பொழுதும் நன்றாக
வண்ணங்கள் வாழ்க்கையில்
வசந்தத்தை காண்கையில்
வெற்றிடம் அடையாமல்
உறவைக் காக்கிறோம்
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
{{comments.comment}}