மதுரை: ஹார்மோன் கோளாறுகளை, சீட்ஸ் சைக்கிளிங் ட்ரீட்மென்ட் மூலமாக சரி செய்யலாம் என்று நேச்சுரோபதி மருத்துவம் பரிந்துரைக்கிறது.
மனித உடலில் ஹார்மோன் பங்கு என்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் ஹார்மோன்கள் சீராக இயங்கினால் மட்டுமே உடல் ஆரோக்கியம் மேம்படும். அதாவது உடல், மனம் ஆகிய இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும். மாறாக ஹார்மோன்கள் சமநிலை இன்றி இயங்குவதால் தான் உடலில் பல்வேறு உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதன் வெளிப்படுத்தக்கூடிய கோபம், கவலை, மகிழ்ச்சி, துக்கம், போன்ற உணர்ச்சிகளாலும் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும்.
நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது நம்முடைய ஹார்மோன்கள் நன்றாக ஆக்டிவாகும். அதே போல் கோபம் கவலை கொள்ளும் போது ஹார்மோன்களின் பங்கு குறைந்து மன அழுத்தம், இரத்த அழுத்தம், டென்ஷன் போன்றவை பிரச்சனைகளை ஏற்படுத்தும் . குறிப்பாக தற்போது உள்ள காலகட்டத்தில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு தான் ஹார்மோன் பிரச்சனைகள் அதிகம் வருகின்றன. ஏனெனில் ஹார்மோன் மாற்றத்தினால் முறையற்ற மாதவிடாய், தைராய்டு, கர்ப்பப்பை பிரச்சினைகள், நீர்கட்டிகள், போன்ற பல்வேறு உடல் உபாதைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர்.

அதேபோல் பெண் பிள்ளைகள் முறையான வயதில் பூப்படையாமல் குறைந்த வயதிலேயே வயது வருகின்றனர். இதனால் குழந்தையின்மை கருமுட்டை வளர்ச்சி இன்மை போன்ற பிரச்சனைகளால் பெண் பிள்ளைகள் மிகுந்த சிரமம் கொள்கின்றனர்.
இந்த பிரச்சனைகளை சரி பண்ண என்ன செய்யலாம்..? நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலேயே இதனை சரி செய்யலாம். அதாவது ஹார்மோன் பிரச்சனைகள் நீங்க நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் 30 கிராம் அளவிற்கு ஆரோக்கியமான புரத சத்துகள் அவசியம். அதிக புரோத உணவுகளை எடுத்துக் கொள்ளவும் கூடாது. இதனால் நம் உடலில் சரியான அளவு புரத உணவுகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
சரி இதனை எப்படி அணுக வேண்டும் என்று தானே கேட்கிறீர்கள். அதாவது ஹார்மோன் சைக்கிளிங் ட்ரீட்மென்ட் மூலம் ஹார்மோன் பிரச்சனைகளை சீர் செய்யலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன..
ஆளி விதை
பூசணி விதை
சூரியகாந்தி விதை
எள் விதை
வெள்ளரி விதை
சியா விதை
மேற்கொண்ட விதைகளை சம பங்கில் எடுத்துக்கொண்டு நன்றாக வறுத்து பவுடர் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்தப் பவுடரை தினமும் காலையில் ஒரு ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக ஹார்மோன் பிரச்சனைகள் சீராகும் என இயற்கை வாழ்வியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குறிப்பு: காய்கறிகள், பழங்கள், கீரைகள், புரதம் நிறைந்த உணவுகள், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகள் என முறையான உணவு களை பின்பற்றி அத்துடன் இந்த விதைகளை எடுத்துக் கொண்டால் ஹார்மோன் பிரச்சனைகள் சீராகும். அதே சமயத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், போன்றவற்றை எடுத்துக் கொண்டு இந்த விதை பவுடரை உண்டு வந்தால் எந்த பலனும் கொடுக்காது. ஏனெனில் நம் உணவு சீரான உணவு முறைகளோடு இந்த இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தினால் மட்டுமே முன்னேற்றம் கிடைக்கும். மருத்துவ உணவுகளை எடுத்துக் கொள்வதற்கு முன்பு உரிய மருத்துவ ஆலோசனை எடுப்பது அவசியம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வெடிகுண்டு மிரட்டல்.. அதிகாலையிலேயே வந்த பரபரப்பு மெயில்.. உஷாரான போலீஸார்
கோவையில் இயற்கை வேளாண் மாநாடு.. பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை
TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!
கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}