- சு.தா. அறிவழகன்
நவராத்திரி என்றாலே நம் நினைவுக்கு வருவது வண்ணமயமான கொலு பொம்மைகள், பாமாலைகள், சுண்டல் மணக்கும் வீடுகள் மற்றும் ஒன்பது இரவுகளின் ஆன்மீகக் கொண்டாட்டம் தான்.
சக்தியை வழிபடும் இத்திருவிழா வெறும் வழிபாட்டைக் கடந்து, கலை, கலாச்சாரம், ஒற்றுமை மற்றும் ஊரே விழாக்கோலம் பூணும் கண்கொள்ளாக் காட்சிகளின் சங்கமமாகும். நவராத்திரியின் உண்மையான சுவாரஸ்யமே அதன் பன்முகத்தன்மையும், ஊருக்கு ஊர் வெளிப்படும் தனித்துவமான கொண்டாட்ட முறைகளும் தான்!
வீடுகளில் படிக்கட்டுகளில் வைக்கப்படும் பொம்மைகள் வெறும் பொம்மைகள் அல்ல; அவை புராணக் கதைகளையும், சமூக வாழ்வியலையும் பேசும் பொம்மைக் கூடம். ஒவ்வொரு பொம்மையின் பின்னும் ஒரு கதை இருக்கும்.
மாலை நேரங்களில் பெண்களும் குழந்தைகளும் வீதி வீதியாகச் சென்று கொலு தரிசனம் செய்வதும், நாவில் கரையும் சுண்டல் வகைகளைப் சுவைப்பதும் நவராத்திரியின் அழியாத நினைவுகள். நவராத்திரியின் ஒன்பது நாட்களுக்குப் பிறகு வரும் தசரா மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்கள் சில இடங்களில் உலகப் புகழ்பெற்றவை.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான மைசூரில் தசரா விழா என்பது ஒரு அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மைசூர் அரண்மனை பல்லாயிரக்கணக்கான மின் விளக்குகளால் ஜோடிக்கப்பட்டு தங்கக் கோட்டை போல மின்னும். தசரா பண்டிகையின் முக்கிய நிகழ்வாக, யானையின் மீது அம்பாரியில் வைக்கப்படும் சாமுண்டீஸ்வரி தேவியின் தங்கச் சிலை ஊர்வலம் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெறும்.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மிகவும் தனித்துவமானது. இங்கு தசரா திருவிழா என்பது ஒரு மக்கள் திருவிழா. லட்சக்கணக்கான பக்தர்கள் காளி, சிவன், ராஜா, குறத்தி போன்ற பல்வேறு வேடங்களை (வேஷம்) அணிந்து, காணிக்கை சேகரித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மைசூருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தசரா கொண்டாட்டத்திற்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடும் மிக முக்கிய இடம் இதுவாகும்.
நவராத்திரியின் பத்தாம் நாளான விஜயதசமி, தீமையை வென்ற வெற்றிக் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறு குழந்தைகளுக்குக் கல்வித் தொடக்கம் செய்யும் வித்யாரம்பம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. "ஹரி ஸ்ரீ கணபதி நம:" என அரிசியில் எழுதத் தொடங்கும் அந்தத் தருணம் ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் ஒரு பொன்னான மைல்கல். மேலும், அன்று புதிய தொழில்கள் மற்றும் எந்தவொரு புதிய முயற்சிகளையும் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.
ஊருக்கு ஊர் வடிவம் மாறினாலும், கொண்டாட்டத்தின் ஆன்மா ஒன்றே - அதுதான் பக்தியும் மகிழ்ச்சியும் பொங்கும் நவராத்திரி வைபவம்!
விழாக்கள்தான் இந்தியாவின் அழகு.. ஒவ்வொரு காலகட்டத்திலும் விதம் விதமான விழாக்களைக் கொண்டாடி மகிழ்வது இந்தியாவின் பாரம்பரியம்.. இப்போது நவராத்தி கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.. மகிழ்ந்திருப்போம்.
நவராத்திரி ஸ்பெஷல்.. இன்றும் நாளையும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்.. Full List!
Thentamil Editorial: பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் நவராத்திரி.. மைசூர் முதல் குலசேகரப்பட்டினம் வரை
நவராத்திரி வந்தாச்சு.. விதம் விதமாக கொலு வச்சுக் கொண்டாடத் தயாரா மக்களே?
பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!
Purattasi Special Dish: வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி?
தமிழகத்தில் தொடரும் மழை: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
டெல்லியில் உச்ச கட்ட பதற்றம்: கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, நேஹா போரா கைது!
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் பிரதமருக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்
மாமன் காரன் பெத்த புள்ளே மனசைத் தொறந்து பேசும் புள்ளே!
{{comments.comment}}