அஜீத், கமல்ஹாசன் வழியில் நயன்தாரா.. லேடி சூப்பர்ஸ்டாரை துறந்தார்.. அடுத்து ரஜினிகாந்த்தா?

Mar 05, 2025,05:36 PM IST

சென்னை: அஜீத் தல பட்டத்தைத் துறந்தது போல, உலக நாயகன் பட்டத்தை கமல்ஹாசன் கைவிட்டது போல இப்போது லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை நயன்தாரா கைவிடுவதாக அறிவித்துள்ளார். இதனால் அடுத்து பட்டத்தைத் துறக்கப் போவது ரஜினிகாந்த்தாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று சாதனை படைத்த நடிகர் நடிகைகளை கௌரவிக்கும் விதமாக பட்டம் கொடுத்து அழைத்து வருவது வழக்கம். அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், இளைய தளபதி விஜய், தல அஜித், என மக்கள் தங்கள் மனம் கவர்ந்த நடிகர்களை இவ்வாறு பெருமைப்படுத்தி வருகின்றனர். அதேபோல் நடிகைகளில் பழம்பெரும் நடிகைகளான, சரோஜாதேவி, சாவித்திரி அவர்களுக்குப் பிறகு முதல் முதலாக நடிகை நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரமும் கௌரவமும் கிடைத்தது. அவரை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.



 

சமீப காலமாக முன்னணி நடிகர்கள் தங்கள் பட்டங்களை துறந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் கமலஹாசன் தனக்கு உலக நாயகன் உள்ளிட்ட எந்த பட்டமும் வேண்டாம் என துறந்துள்ளார். அதேபோல் நடிகர் அஜித்குமாரும் தன்னை தல என ரசிகர்கள் அழைக்க வேண்டாம் எனவும் கூறியிருந்தார்.  இந்த நிலையில் நடிகை நயன்தாரா தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது. உங்கள் அன்பும் ஆதரவும்தான் அதை அழகு சேர்த்துள்ளது. என் வெற்றியின் போது என் தோளில் சாய்த்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னைத் தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள். நீங்கள் பலரும் என்னை லேடி சூப்பர்ஸ்டார் என்று அன்புடன் அழைத்து வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இனிமேல் என்னை நயன்தாரா என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


என் பெயர் தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. பட்டங்களும், விருந்துகளும் மதிப்பு மிக்கவை தான். ஆனால் சில சமயங்களில் அவை நம்மை வேலையில் இருந்தும், கலைத்தொழியில் இருந்தும், உங்கள் அன்பான தொடர்பில் இருந்தும் பிரிக்கக்கூடும். நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் அன்பின் மொழி நம்மை எல்லா எல்லைகளையும் கடந்து இணைத்திருக்கிறது. எதிர்காலம் எதைக் கொண்டுவந்தாலும், உங்கள் ஆதரவு என்றும் மாறாது என்பதைத் தெரிந்துகொள்வதில் எனக்கு பேரானந்தம். அதேசமயம், உங்கள் அனைவரையும் மகிழ்விக்க என் கடின உழைப்பு தொடர்ந்து இருக்கும். சினிமாதான் நம்மை ஒன்றாக இணைக்கிறது. அதை நாமெல்லோரும் சேர்ந்து கொண்டாடிக்கொண்டே போகலாம்.இதனால் தன்னை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என நடிகை நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார்.


லேடி சூப்பர்ஸ்டார் தனது பட்டத்தைத் துறந்திருப்பதால் மேல் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்தும் தனது பட்டத்தைக் கைவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஐபிஎல் 2026.. மினி ஏலத்திற்கு அணிகள் ரெடி.. யாரிடம் எவ்வளவு பணம் இருக்கு பாருங்க!

news

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களே.. ரெடியா.. மார்ச் 26ல் தொடங்குகிறது.. ஐபிஎல் 2026!

news

The See-Saw of the Mind.. இன்றைய ஆங்கிலக் கவிதை!

news

டெல்லி பனிமூட்டத்தால் விபரீதம்.. அடுத்தடுத்து மோதிக் கொண்டு தீப்பிடித்த வாகனங்கள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 16, 2025... இன்று நினைத்த காரியங்கள் கைகூடும்

news

மார்கழி 1.. மாணிக்கவாசகரின் திருவெம்பாவை.. ஆதியும் அந்தமும் இல்லா!

news

மார்கழி 1.. கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை.. பாசுரம் 1.. மார்கழித் திங்கள்!

news

துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!

news

அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

அதிகம் பார்க்கும் செய்திகள்