7 தொகுதி இடைத் தேர்தல்.. பாஜக, இந்தியா கூட்டணிக்கு தலா 3 இடங்களில் வெற்றி!

Sep 08, 2023,05:01 PM IST
டெல்லி: 7 சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு 3 இடங்களிலும், பாஜகவுக்கு 3 இடங்களிலும் வெற்றி கிடைத்துள்ளது.

6 மாநிலங்களைச்  சேர்ந்த 7 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டன. காரணம், இந்தியா கூட்டணி உருவான பின்னர் நடைபெற்ற தேர்தல் இது என்பதால்.

இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணியும், பாஜக கூட்டணியும் தலா 3 இடங்களில் வென்றுள்ளனர். இன்னொரு இடத்திலும் இந்தியா கூட்டணியே முன்னணியில் உள்ளது.



எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி, மேற்கு வங்காளத்தின் துக்புரி, கேரளாவின் புதுப்பள்ளி ஆகிய இடங்களில் வெற்றி கிடைத்தது.  பாஜகவுக்கு திரிபுராவில் 2 இடத்திலும், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு இடத்திலும் வெற்றி கிடைத்தது.

7வது இடமான உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோசி தொகுதியில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி முன்னணியில் உள்ளது. 

இந்த வெற்றியை இந்தியா கூட்டணிக் கட்சிகள் பெரியஅளவில் கொண்டாடி வருகின்றன. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதையே இந்த வெற்றி உணர்த்துவதாகவும், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தால் பாஜகவை எளிதாக வெல்ல முடியும் என்பதை இந்தியா கூட்டணி உணர்த்தி விட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!

news

செம்மொழியான தமிழ் மொழியே

news

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!

news

இயற்கை நீதி!

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்