வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

Apr 01, 2025,06:57 PM IST
டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாத காலகட்டத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது‌ குறிப்பாக  தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக காணப்படுகிறது. அத்துடன் வெப்ப அலையும் அதிகமாக வீசுகிறது‌.இதனால் மக்கள் மதிய வேலைகளில் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாத காலகட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம்.  கணித்துள்ளது. 

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:



நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட கூடுதலாக இருக்கும். மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் சில பகுதிகளில் மட்டும் வழக்கமான பருவநிலை நீடிக்கும். ஏப்ரல் முதல் ஜூன் மாத காலகட்டத்தில் வழக்கமாக நான்கு முதல் ஏழு நாட்கள் வெப்ப அலை வீசும் நிலையில், இயல்பை விட வெப்ப அலை வீசும் நாட்கள் இரு மடங்காக அதிகரிக்கும்.

அதன்படி ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் நாட்கள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் எதிரொலியாக நாட்டில் மின்சார பயன்பாடு 9 முதல் 10 விழுக்காடு அதிகரிக்கும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்