NEET fraud: என்னது கொடுமை இது.. நீட் கேள்விகளை லீக் செய்ய ரூ. 32 லட்சமா?

Jun 20, 2024,03:32 PM IST

டில்லி :   நீட் யுஜி தேர்வு கேள்விகளை லீக் செய்வதற்கு ரூ.32 லட்சம் வரை பெற்றதாக முக்கிய குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளது. அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 


சமீபத்தில் நீட் யுஜி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஒடிசாவை சேர்ந்த, அதுவும் ஒரே ஊரை சேர்ந்த எட்டு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று, டாப் ரேங்க் பட்டியலில் இடம்பிடித்திருந்தனர். ஒரே ஊரை சேர்ந்தவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு மதிப்பெண் வாங்க முடியும் என சந்தேகம் எழுப்பப்பட்டு, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.




இதில் நீட் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் ஏற்கனவே லீக் செய்யப்பட்டதும், அதை பயன்படுத்தியே ஒரே ஊரை சேர்ந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றதும் தெரிய வந்தது. இது தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரைணயில், தானாபூர் முனிசிபல் கமிட்டி ஜூனியர் இன்ஜினியர் சிக்கந்தர் யாதவேந்து அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.


நீட் கேள்வி கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆனந்த்தை தொடர்பு கொண்ட சிக்கந்தர், நீட் தேர்வுக்கு தயாராகி வரும் 4 மாணவர்கள் , கேள்விகளை லீக் செய்தால் லட்சங்களில் பணம் தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதை ஏற்றுக் கொண்ட ஆனந்த்தும் கேள்வி தாள்களை கொடுத்துள்ளார். அதற்கு பதிலும் தயார் செய்து அந்த 4 மாணவர்கள் மற்றும் இன்னும் சிலருக்கு கொடுத்துள்ளனர். இதற்காக ரூ.32 லட்சம் வரை பணம் பெற்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். 


ஆனந்த், அவரது சகோதரி ரீனா யாதவ் ஆகியோரின் வீடுகளில் இருந்து நீட் கேள்வி தாள்கள், ஓஎம்ஆர் ஷீட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. நாட்டை அதிர்ச்சி அடைய வைத்துள்ள இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்